திரைத்துறையில் 60 ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் அதே மோகத்தோடும் வேகத்தோடும் ரசிகர்களின் ரசனையை மெருகேற்றும் கலைஞனாக சிறந்த திரைப்படங்களை வழங்கி வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன். அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் விக்ரம் திரைப்படத்தில் உலக நாயகனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், ரமேஷ் திலக், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் ஜோஸ், மேகா ஆகாஷ், ஆடுகளம் முருகதாஸ், ஷிவாணி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலொமின்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ள கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். பல கட்டங்களாக தொடர்ந்து முழுவீச்சில் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற படப்பிடிப்பில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கமல்ஹாசனுடன் நடிகர் ஃபகத் பாசில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் விக்ரம் படக்குழுவினர் இணைந்திருக்கும் உலக நாயகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்  வெளியாகிள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ...