தமிழ் சினிமாவின் முன்னணி கமர்சியல் இயக்குனர்களில் ஒருவராக குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது அரண்மனை 3 திரைப்படம்.

அரண்மனை-3 படத்தில் இயக்குனர் சுந்தர்.C, ஆர்யா, ஆண்ட்ரியா மற்றும் ராஷி கண்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, யோகிபாபு, விவேக், மைனா நந்தினி, மனோபாலா, நளினி, சாக்ஷி அகர்வால், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ள அரண்மனை3 படத்தை நடிகை குஷ்புவின் ஆவ்னி சினிமேக்ஸ் தயாரிக்க, ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிட்டது.இசையமைப்பாளர் C.சத்யா இசையில், U.K.செந்தில் குமார் ஒளிப்பதிவில் ஹாரர் காமெடி திரைப்படமாக வெளிவந்த அரண்மனை 3 ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது அரண்மனை 3 படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியானது. பிரபல நிறுவனமான ZEE5 OTT தளத்தில் வருகிற நவம்பர் 12-ஆம் தேதி முதல் இயக்குனர் சுந்தர்.சி-யின் அரண்மனை 3 திரைப்படம் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.