தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இதுவரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தமிழில் தயாரித்துள்ளன. மேலும் தமிழ் மற்றும் பிற மொழிகளில் உருவாகும் பல திரைப்படங்களை தமிழில் வெளியிட்டுள்ளனர்.

தேனாண்டாள் பிலிம்ஸ் என்றாலே ஃபேன்டஸிக்கு எந்த குறையும் இருக்காது. குறிப்பாக வா அருகில் வா, பாளையத்தம்மன், அன்னை காளிகாம்பாள், தில்லுக்கு துட்டு என குழந்தைகள் விரும்பும் பல படங்களை தயாரித்துள்ளது. அதேபோல் பல சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களை தமிழில் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக வெளிவந்த மெர்சல் திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

இயக்குனர் வீரேஷ் எழுதி இயக்கியுள்ள பிராட்வே படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சரவணன் அமுதன் ஒளிப்பதிவில் , அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் பிராட்வே படத்திற்கு திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ப்ராட்வே படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.