இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை HOOTE APP மூலமாக ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் இன்று (டிசம்பர் 23ஆம் தேதி), 

கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட அண்ணாத்த படப்பிடிப்பு 2020 மார்ச் மாதம் கொரோனாவால் நிறுத்தப்பட்டது. மீண்டும்  9 மாத இடைவெளிக்குப் பிறகு டிசம்பரில் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த முறை பலத்த பாதுகாப்புகளோடு மொத்த படக்குழுவும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் அனைவருக்கும் கட்டாயம் கோவிட் பரிசோதனை செய்து இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் இருந்தன.

அப்படி இருந்தும் நடிகை கீர்த்தி சுரேஷின் உதவியாளருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. வைரஸ் தொற்று முன்பே ஏற்பட்ட இருந்ததும் எங்களுக்கு 5 நாட்களுக்கு பிறகே தெரிய வந்தது. உடனடியாக பரிசோதனை செய்ததில் எனக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தபோதிலும் நுரையீரல் ஸ்கேன் செய்ய அனைவரும் வற்புறுத்தினர். நல்லபடியாக தொற்று இல்லாத காரணத்தால் மீண்டும் பாதுகாப்போடு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது.

தொற்று இல்லாத போதும் மருத்துவர்கள் தனித்திருக்கும் படி அறிவுறுத்தினர், படப்பிடிப்பு 700-800 ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு நடுவில் நடைபெற்றது. ஆனால் அந்த படப்பிடிப்பில் நான் மட்டும் தனியாக ஒரு மாடியில் நின்று இருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் இது கோவிட் காரணமாக அல்ல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கிரிப்டில் அப்படி தான் இருந்தது. இதை நான் இறைவனின் செயலாக பார்க்கிறேன். படம் வெளியான பின்பும் அடுத்த ஓரிரு தினங்களில் தொடர்ந்து கன மழை பொழிந்தது. அதுவே ரிலீஸ் என்று பொழிந்திருந்தால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கும்.

இவ்வாறாக படப்பிடிப்பு தொடங்கியது முதல் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸ் வரை ஏற்பட்ட பல தடைகளையும் நாங்கள் கடந்து வர இறைவன் உறுதுணையாக இருக்கிறார்.  இந்த தருணத்தில் நான் பாட்ஷாவில் பேசிய வசனம் நினைவுக்கு வருகிறது. ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான் ... ஆனா கெட்டவங்கள ... ஹஹ..ஹஹ..

என தனக்கே உரித்தான சிரிப்போடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ள இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. அந்த பதிவு இதோ…