தமிழ் சினிமாவின் முன்னணி நட்சித்திர நடிகராக , பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழும் அஜித் குமார் நடிப்பில் அடுத்து ரிலீஸாகவுள்ள திரைப்படம் வலிமை. முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் பே வியூ ப்ராஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) பொங்கல் விருந்தாக வருகிற ஜனவரியில் ரிலீஸாகவுள்ளது

சதுரங்கவேட்டை, தீரன் மற்றும் நேர்கொண்டபார்வை படங்களை இயக்கிய இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ள வலிமை திரைப்படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து ஹூமா குரேஷி, யோகி பாபு, விஜய் டிவி புகழ் ஆகியோர் நடிக்க, மிரட்டலான வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள வலிமை படத்தில் திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். முன்னதாக வெளியான வலிமை மோஷன் போஸ்டர் ,Glimpse, மேக்கிங் வீடியோ & வலிமை விசில் தீம் வீடியோ உட்பட அனைத்தும்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் வலிமை திரைப்படத்தை கோபுரம் சினிமாஸ் வெளியிடுகிறது. இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் கேரளா ரிலீஸ் உரிமையை E4என்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.