“மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை, 25 லிருந்து 21 ஆக குறைத்து அரியானா அரசு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றி உள்ளது” அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா, பல இனங்கள், பல மொழிகள் பேசும் மாநிலங்கள் தான். என்றாலும், ஒவ்வொரு மாநில மக்களின் கலாச்சார சூழலுக்கு ஏற்ப சட்ட விதிமுறைகளும் வகுக்கப்பட்டு இருக்கின்றன.

அந்த வகையில், இந்தியாவில் பல மாநிலங்களில் ஒவ்வொரு மாதிரியான விதிமுறைகள் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகின்றன.

அதாவது, “மதுபானங்கள் என்பது, தற்போது மிக மிக எளிதாகவும் சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு பொருளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, சிறுவர்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் இந்த மதுப் பழக்கத்திற்கு அடிமையாகத் தொடங்கி உள்ளனர் என்றும், தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தான், “அரியானா மாநிலத்தில் மதுபானம் மற்றும் பிற போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதற்கு, மற்றும் விற்பதற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயதை 25 வயதிலிருந்து 21 ஆக குறைத்து” அரியானா அரசு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

அத்துடன், “இந்தியாவின் பிற மாநிலங்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு மற்றும் விற்பதற்குக் குறைந்த வயது வரம்புகளை நிர்ணயம் செய்திருப்பதால், அரியானாவிலும் குறைத்திருப்பதாக” அரியானா மாநில அரசு, இதற்கு விளக்கமும் அளித்திருக்கிறது.

இது குறித்து அரியானா கலால் திருத்த மசோதா 2021, அரியானா கலால் சட்டம் 1914 இன் 27, 29, 30 மற்றும் 62 பிரிவுகளில் மாற்றங்களுடன், அந்த மாநில சட்டசபையில் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 

“தங்களது மாநிலத்தைப் பொறுத்தவரையில், அம்மாநில மக்கள் தற்போது கல்வி அறிவு பெற்றவர்களாகவும், குடிப் பழக்கம் குறித்த பகுத்தறிவு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும்” இந்த மசோதாவில் அந்த மாநில அரசு விளக்கம் கூறியிருக்கிறது.

குறிப்பாக, “இந்த திருத்த மசோதா மூலம் மது அருந்துதல், அதை வாங்குதல் அல்லது விற்பனை செய்வதற்கான குறைந்தபட்ச வயதை 25 லிருந்து 21 வயதாகக் குறைப்பதாகவும்” அரியானா அரசு அதில் வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளது.

அதே போல், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கூட போதைப் பொருட்கள் பயன்படுத்துவதற்கு மற்றும் மது வகைகளை விற்பதற்கான வயது வரம்புகளானது 21 வயதாக சமீபத்தில் குறைக்கப்பட்டது.

அதே போல், “ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களிலும் மது குடிப்பவர்களுக்கான வயது வரம்பு 18 வயதாக உள்ளதாகவும்” செய்திகள் கூறுகின்றன.