இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி திரைப்படங்களில் ஒன்றாக கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டராகி ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படம் சந்திரமுகி. ஹாரர் காமெடி திரைப்படமாக வெற்றிபெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது.

முனி & காஞ்சனா என ஹாரர் காமெடி படங்களில் ஹிட் கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க, தயாராகும் சந்திரமுகி 2 திரைப்படத்தையும் இயக்குனர் P.வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும்  சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார்.  சமீபத்தில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. படப்பிடிப்பிற்கு முன் சூப்பர்ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று ராகவா லாரன்ஸ் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 

சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக தனது உடலை புதிய ட்ரானஸ்ஃபர்மேஷனுக்கு உட்படுத்தியுள்ளார் லாரன்ஸ். சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

With master pic.twitter.com/pqkczu0tO9

— Manobala (@manobalam) October 14, 2022

Chandramukhi shooting spot pic.twitter.com/6duHiNNwPk

— Manobala (@manobalam) October 14, 2022