இந்திய அளவு ஒரே படத்தில் மிக பெரிய அளவு பிரபலமான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியீல் பல குறும்படங்களை இயக்கிய அல்போன்ஸ் பின் தமிழில் முதல் முதலாக ‘நேரம்’ என்ற படத்தை கொடுத்தார். வித்யாசமான கதைக்களம் பெரும்பாலும் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் புது முகம். இருந்தாலும் தனித்துவமான கதைக்கே படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் நிவின் பாலியை வைத்து மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தை இயக்கினார். ஆட்டோ கிராப் கதையம்சம் கொண்ட பிரேமம் திரைப்படம் இளைஞர்களை கவரும் அளவு வித்யாசமான திரைக்கதையும் எதிர்பாராத திருப்பமும் நுணுக்கமான தொழில் நுட்ப கலையும் படத்தை ஒரு படி மேலே உயர்த்தி இந்திய அளவு பிரபலமடைய செய்தது. அந்த ஆண்டு வெளியான மிக சிறந்த காதல் திரைப்படமாக பிரேமம் திரைப்படம் இருந்தது. பல மாநில ரசிகர்கள் மலையாள சினிமா மீது மோகம் கொள்ள வைத்த திரைப்படம் பிரேமம் என்பது குரிப்பிடதக்கது.
அதன்பின் தமிழில் ‘அவியல்’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை எடுத்தார். ஆனால் பெருமளவு படம் கைக்கொடுக்காமல் போக திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார் பின் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் மலையாளத்தில் பிரித்வி ராஜ், நயன்தாரா நடிப்பில் உருவான ‘கோல்ட்’ திரைப்படத்தை இயக்கினார். அட்டகாசமான கதைக்களத்துடன் படம் வெளியாகி கலைவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து தமிழ், மலையாளம் என்று மாறி மாறி படம் எடுக்கும் அல்போன்ஸ் புத்திரன் அடுத்ததாக தமிழில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அதனையடுத்து பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புது படத்தை இயக்கவுள்ளார். அதன் ஆரம்ப கட்ட வேலையில் இறங்கி உள்ளார். 40 துணை நடிகர்களுக்கான தேடுதல் நேர்காணல் நடத்தவுள்ளதாகவும் அதில் வரும் ஏப்ரல் 3 முதல் 10ம் தேதி வரை நடிக்க விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார். இந்த படத்தில் எழுத்து இசை, படத்தொகுப்பு மற்றும் இயக்கம் என பல்துறையில் அல்போன்ஸ் களம் இறங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் விஜய் சமந்தா வை வைத்து பிரேமம் திரைப்படம் போல் ஒரு காதல் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்குவது என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருந்தார். அதற்கு அல்போன்ஸ் புத்திரன் “ஒருவேளை அவர்கள் இதற்கு சம்மதித்தால் நிச்சயம் ஒரு நல்ல காதல் கலந்த ஆக்ஷன் திரைப்படத்தை கொடுப்பேன். இருவரும் ஆக்ஷன் காட்சிகளை செய்வதில் சிறந்தவர்” என்று பதிலளித்து உள்ளார். இதனையடுத்து அல்போன்ஸ் புத்திரன் பதிவு மிகபெரிய அளவு ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
அல்போன்ஸ் புத்திரன் முன்னதாக தமிழில் மிகப்பெரிய நட்சத்திரங்களான கமல் ஹாசன் , அஜித் குமார், விஜய் ஆகியோருக்கு கதை வைத்திருப்பதாகவும் அவர்களை இயக்குவதற்கான வாய்ப்பிற்கு காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.