Social Media வில் தளபதி விஜய் செய்த 5 தரமான சம்பவங்கள்.. – அட்டகாசமான பட்டியல் இதோ..

சமூக ஊடங்கங்களில் தளபதி விஜய் மாஸ் சம்பவங்கள் - Thalapathy vijay mass moments in social media | Galatta

தன் கடின உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் பல தாசப்தங்கள் பல மெஹா ஹிட் திரைப்படங்களை கொடுத்து இன்று பாக்ஸ் ஆபிஸ் சாம்ராட்டாக வலம் வந்து இந்திய அளவு கவனம் பெற்ற நடிகர் தளபதி விஜய். எல்லை கடந்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் தளபதி விஜயின் திரைப்படம் வெளியாகும் நாட்கள் எல்லாம் திருவிழா கோலம் தான். அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக பல்சுவை விதங்களில் படங்களை கொடுத்து உச்சம் தொட்டு இன்று அசைக்க முடியாத உயரத்தில் இருந்து வருகிறார். தளபதி விஜய் என்ன செய்தாலும் அது அன்றைய தலைப்பு செய்தியாக இந்திய அளவில் ஒளித்து கொண்டிருக்கும் அதன்படி தளபதி விஜய் சமூக வலை தளங்களில் செய்த மாஸ் நிகழ்வுகளை தொகுத்து இருப்பது இந்த சிறப்பு கட்டுரை.

ஜல்லிக்கட்டு

கடந்த 2017 ஜல்லிக்கட்டு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் இறங்கினார். அதில் பல திரை நட்சத்திரங்கள் அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு ஆதராவாக  குரல் கொடுக்க இந்திய முழுவதும் மக்கள் ஒன்றாக அணி திரண்டு முன் வந்தனர். இந்த போராட்டத்தில் இரவில் தளபதி விஜயும் கலந்து கொண்டு பங்கேற்றார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெருமளவு பேசபட்டு அன்றைய சூழலில் இந்திய அளவு வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

#JusticeforJallikattu pic.twitter.com/VAiD8h9cu2

— Vijay (@actorvijay) January 17, 2017

 

நெய்வேலி 

கடந்த 2020 ல் வரி எய்ப்பு செய்த குற்றசாட்டின் பேரில் நடிகர் விஜய் வீட்டில் சுமார் 23 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் எந்தவொரு ரொக்கமும், ஆவணங்களும் வரம்பு மீறி சேர்க்கப்பட்டதாக குறிப்பிட்டு கைப்பற்றவில்லை என வருமானவரி துறை தெரிவித்தது. இருந்தாலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தீல் விஜய் நடித்து கொண்டிருந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் விஜயை வருமானவரித்துறையினர் வலுகட்டாயமாக அழைத்து வந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில் விஜய் படப்பிடிப்பில் இருக்கும்போது படப்பிடிப்பு நடத்த கூடாது என்று சிலர் போராட்டத்தில் எடுப்பட்டனர். அதே நேரத்தில் ரசிகர்களும் அந்த இடத்தில் கூடி விஜய் க்கு ஆதராவாக நின்றனர். இந்நிலையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது அந்த சம்பவம். படப்பிடிப்பு முடிந்து விஜய் புறப்படும்போது அங்கு இருந்த வாகனம் மீது விஜய் ஏறி நின்று அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தனது ரசிகர்களுக்கு நன்றியினை தெரிவித்தார். மேலும் ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் விஜய் செல்பி எடுத்து கொண்டார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி அதனுடன், “நன்றி நெய்வேலி” என்று தெரிவித்தார்.

 

Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl

— Vijay (@actorvijay) February 10, 2020

பின்னர் இந்த புகைப்படம் ரசிகர்களால் வைரலாகி இந்தியாவிலே அதிகம் பகிரப்பட்ட நட்சத்திரங்களின் புகைப்படம் என்று 2 லட்சத்து 46 ஆயிரம் எண்ணிக்கையில் இதுவரை இருந்து வருகிறது. இதனை 2020 ம் ஆண்டு இறுதியில் ட்விட்டர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

The most Retweeted Tweet of 2020
2020 में सबसे ज्यादा रीट्वीट हुआ ट्वीट
2020ம் ஆண்டின்அதிகம் ரிடுவீட் செய்யப்பட்டடுவீட் pic.twitter.com/JpCT4y6fJm

— Twitter India (@TwitterIndia) December 8, 2020

 

GO GREEN CHALLENGE

ஊரடங்கின் போது இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் மக்கள் மரம் நட வேண்டும் என்ற செயல்பாட்டினை நட்சத்திரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பலர் மரம் நட்டு பின் அதனை தன் ரசிகர்களுக்கு சக கலைஞரையும் சேர்த்து உங்களால் செய்ய முடியுமா? என்ற சவாலையும் கொடுத்து வந்தனர். இதில் கிரிக்கெட் வீரர்கள் எம் எஸ் தோனி, விராட் கோலி மற்றும் திரை நடிகர்கள் சமந்தா, த்ரிஷா, நாகர்ஜுனா, ஸ்ருஹி ஹாசன், ஜூனியர் என் டி ஆர், பிரபாஸ் மற்றும் பலர் இதனை செய்து வந்தனர் இந்நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிகர் விஜயை சேர்த்து சவால் கொடுத்தார். சவாலை ஏற்ற விஜய் “இது உங்களுக்காக மகேஷ் பாபு காரு..” என்று தனது வீட்டில் மரம் நடும் புகைப்படத்தை பகிர்ந்தார்.

இதனையடுத்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும் விஜய் புகைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடம் கொடுத்து பல ரசிகர்கள் மரங்களை நட்டது அன்றைய பெரும் பொருளாக மாறியது.

This is for you @urstrulyMahesh garu. Here’s to a Greener India and Good health. Thank you #StaySafe pic.twitter.com/1mRYknFDwA

— Vijay (@actorvijay) August 11, 2020

 

வாரிசு இசை வெளியீட்டு விழா

கடந்த பொங்கல் திருநாளையொட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பில் மத்தியில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. உலகளவில் வசூலை குவித்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. விழா மேடையில் தளபதி விஜய் தனது ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் நின்று வீடியோ ஒன்றை எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘”என் நெஞ்சில் குடியிருக்கும்” என்ற வார்த்தைகளுடன் பதிவேற்றினார்.

நீண்ட நாள் கழித்து நெய்வேலி சம்பவம் போல் ஒரு வீடியோவை பகிர்ந்தது ரசிகர்களை மேலும் உற்சாகமடைய செய்து பின் அந்த வீடியோ மிகப்பெரிய அளவு வைரலானது.  

#EnNenjilKudiyirukkum pic.twitter.com/4rbooR4XLa

— Vijay (@actorvijay) December 24, 2022

இன்ஸ்டாகிராமில் விஜய்

இதுவரை ட்விட்டர் பக்கத்தை திணறடித்த நடிகர் விஜய் முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கை சர்ப்ரைஸாக திறந்துள்ளார். லியோ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன் “ஹலோ நண்பா.. நண்பீஸ்” என்று பதிவேற்றியுள்ளார். இதையடுத்து கணக்கு திறந்த 20 மணி நேரத்திலே 4.3 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். இன்ஸ்டாகிராமில் இணைந்த மிகக் குறுகிய நேரத்தில் வேகமாக ஒரு மில்லியன் ஃபாலோவர்களை கடந்த நட்சத்திரமாக தளபதி விஜய் தனது முதல் சாதனையை படைத்துள்ளார்.

உலகில் குறுகிய நேரத்தில் 1 மில்லியன் தொடர்பவர்களை பெற்ற நட்சத்திரங்களின் பட்டியியலின் படி, தென் கொரியாவின் நட்சத்திர இசைக்குழுவான பாய் பேண்ட் BTSன் V, 53 நிமிடங்களிலும் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி, 59 நிமிடங்களிலும் பெற்றுள்ளனர். இந்த வரிசையில் நடிகர் விஜய் 99 நிமிடங்களில் ஒரு மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் இந்திய நடிகர்களிலே மிக வேகமாக ஒரு மில்லியன் லைக்குகளை பெற்ற நட்சத்திமாக விஜய் புகைப்படம் பெற்று சாதனை படைத்துள்ளது.  அதுமட்டுமல்லாமல் இன்ச்டாகிராம் பக்கத்தில் அதிக லைக்குகள் பெற்ற கோலிவுட் நட்சத்திரங்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் முன்னதாக 26 லட்சம் லைக்குகளை பெற்று முதல் இடத்தில்ன்  இருந்தார். இந்நிலையில் தளபதியின் காஷ்மீர் புகைப்படம் 20 மணி நேரத்தில் 44 லட்சம் லைக்குகள் பெற்று இந்திய அளவில் முன்னிலை வகிக்கின்றது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

A post shared by Vijay (@actorvijay)

 

சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்த  ஹிப் ஹாப் ஆதி.. அனிருத் குரலில் வெளியானது ‘தண்டர்காரன்’ ப்ரோமோ.. –  அட்டகாசமான முதல் பாடல் இதோ..
சினிமா

சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்த ஹிப் ஹாப் ஆதி.. அனிருத் குரலில் வெளியானது ‘தண்டர்காரன்’ ப்ரோமோ.. – அட்டகாசமான முதல் பாடல் இதோ..

தயவுசெய்து COMPARE பண்ணாதீங்க... கைதி ரீமேக் போலா பட விமர்சனங்களுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் SRபிரபு! விவரம் உள்ளே
சினிமா

தயவுசெய்து COMPARE பண்ணாதீங்க... கைதி ரீமேக் போலா பட விமர்சனங்களுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் SRபிரபு! விவரம் உள்ளே

'பொன்னியின் செல்வன் மாதிரி 10 படங்கள் வந்தால் இந்த கேள்வி இருக்காது!'- நாவல் To சினிமா பற்றி ஜெயமோகனின் தரமான பதில்! வீடியோ உள்ளே
சினிமா

'பொன்னியின் செல்வன் மாதிரி 10 படங்கள் வந்தால் இந்த கேள்வி இருக்காது!'- நாவல் To சினிமா பற்றி ஜெயமோகனின் தரமான பதில்! வீடியோ உள்ளே