"சூரிக்கு தாதா சாகேப் பால்கே விருது.. " நெகிழ்ச்சியில் உறைந்த சூரி... – ரியல் வாத்தியார் கொடுத்த சர்ப்ரைஸ்.. அட்டகாசமான வீடியோ இதோ..

சூரியின் பள்ளிக்கூட வாத்தியாரின் நெகிழ்ச்சியான பேச்சு இதோ - Actor soori school teacher emotional speech | Galatta

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின் நகைச்சுவை நடிகராக பல படங்களில் ஜொலித்தவர் நடிகர் சூரி. தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, சிவா கார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி. இந்தியாவின் முக்கியமான இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அட்டகாசமான கிரைம் திரில்லர் திரைப்படங்களாக உருவான விடுதலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். கதையின் நாயகனாக சூரி நடித்து வெளியாகிருக்கும் விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூரியின் நடிப்பை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பேட்டியில் நடிகர் சூரி கலந்து கொண்டு அவரது திரைப்பயணம் மற்றும் விடுதலை படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இதில் நடிகர் சூரியின் பள்ளி வாத்தியார் இந்த சிறப்பு பேட்டியில் சர்ப்ரைஸாக வருகை தந்து சூரிக்கு இன்பதிர்சியை கொடுத்து அவரது பள்ளி பருவ அனுபவங்களை பகிர்ந்தார். மேலும் சூரி அவர்களை பற்றி தமிழரசன் வாத்தியார் கூறியது,

" நான் உட்கார்ந்துட்டு இருக்கேன். இங்க இருக்கேன்னா.. மேல உட்கார்ந்துட்டு இருக்கேன்னா னு தெரியல.. வானத்துல பறந்துட்டு இருக்கனானு எனக்கு தெரியல.‌ அந்த அளவுக்கு எனக்கு மகிழ்ச்சி..  இப்படி உங்கள இந்த சூழ்நிலையில பார்த்துட்டு அவன் இவன் னு சொல்ல கூடாது.. சூரி அவர்களை நினைச்சு நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. இந்தியாவில் இருக்கும் எத்தனை விருதுகள் இருந்தாலும் அது சூரி கண்டிப்பா பெற வேண்டும்.‌ எனக்கு வயது இருந்தால் சூரி தாதா சாகேப் பால்கே விருது வாங்குவதை நான் பார்த்துட்டு தான் சாகனும்.." என்றார்.

மேலும் இந்த நிகழ்வு குறித்து நடிகர் சூரி, "ஒரே வார்த்தையில சொல்லனும்னா நம்ம தாய், தகப்பனுக்கு அடுத்து வாத்தியார் தான். அதே மாதிரி ஒரு மாணவர் எவ்ளோ தூரம் கடந்து போய் திரும்பி பார்க்கும் போது அவனுக்கு வாத்தியார் உருவம் வந்தால் அதைவிட சந்தோஷம் எதுவும் இல்ல.." என்றார்.

மேலும் நடிகர் சூரி தனது ரசிகர்களின் முன்னிலையில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான அனுபவம் குறித்து பேசிய முழு வீடியோ இதோ..

 

அட்டகாசமான திரில்லர் கதைகளத்தில் மீண்டும் அருள்நிதி.. – மிரட்டலான ‘திருவின் குரல்’ படத்தின் டிரைலர் இதோ..
சினிமா

அட்டகாசமான திரில்லர் கதைகளத்தில் மீண்டும் அருள்நிதி.. – மிரட்டலான ‘திருவின் குரல்’ படத்தின் டிரைலர் இதோ..

விடுதலை பட உதவி இயக்குனர்களுக்கு வெற்றிமாறன் கொடுத்த பரிசு.. குவியும் பாராட்டுகள் – விவரம்  இதோ..
சினிமா

விடுதலை பட உதவி இயக்குனர்களுக்கு வெற்றிமாறன் கொடுத்த பரிசு.. குவியும் பாராட்டுகள் – விவரம் இதோ..

முகேஷ் அம்பானியை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்.. காரணம் இது தான்.. – விவரம் இதோ..
சினிமா

முகேஷ் அம்பானியை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்.. காரணம் இது தான்.. – விவரம் இதோ..