வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 எப்படி இருக்கும்?- எதிர்பார்ப்புகளை தூண்டிய முக்கிய நடிகரின் சுவாரசியமான பதில்! வைரல் வீடியோ

விடுதலை பாகம் 2 குறித்து சேத்தன் பதிலளித்துள்ளார்,chetan shared the secret update of vetrimaaran in viduthalai part 2 movie | Galatta

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் என சொல்லும் அளவிற்கு சிறந்த திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்த படைப்பாக வெளிவந்துள்ள திரைப்படம் விடுதலை பாகம் 1. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இரண்டு பாகங்களாக இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்கிய விடுதலை திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்க மிக முக்கிய வேடத்தில் வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் தமிழ் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள விடுதலை திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவர்களின் ஆர் எஸ் இன்ஃபோர்டைன்மென்ட் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான விடுதலை பாகம் 1 திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விடுதலை திரைப்படத்தை விமர்சனம் ரீதியாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். மிகவும் உணர்வுபூர்வமான கதைக்களம், நேர்த்தியான திரைக்கதை, நடிகர் நடிகைகளின் அசாத்தியமான நடிப்பு & தொழில்நுட்ப கலைஞர்களின் கடின உழைப்பில் இதுவரை பார்த்திராத மிகச்சிறந்த அனுபவத்தை இயக்குனர் வெற்றிமாறன் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பேட்டி அளித்த நடிகர் சேத்தன், விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தும் ரிலீசுக்கு பிறகு கிடைத்துள்ள வரவேற்பு குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசிய போது, “சார் இப்போது அடுத்து விடுதலை பாகம் 2, வாத்தியார் கதாபாத்திரத்தின் ஒரு முன்னோட்டத்தை காட்டி விட்டு மிகுந்த எதிர்பார்ப்போடு ஒரு சஸ்பென்ஸாக முடித்திருக்கிறார்கள்... விடுதலை பாகம் 2 எப்படி இருக்கும்? என கேட்டபோது, “பாகம் 2ஐ பொருத்தவரை முதல் பாகத்தில் எப்படி நடிகர் சூரியின் இன்னொரு பரிணாமத்தை பார்த்தீர்களோ என்னுடைய இன்னொரு முகத்தை நீங்கள் பார்த்தீர்களா அந்த மாதிரி விஜய் சேதுபதியின் இன்னொரு முகத்தை பார்ப்பீர்கள். செம்ம நடிப்பு சூப்பராக இருக்கும் அந்த கதாபாத்திரம்… இரண்டாம் பாகம் முழுவதும் அவருடைய பயணத்தில் தான் இருக்கும்.” என பதிலளித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்த விடுதலை பாகம் 1 பெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரம் இரண்டாவது பாகத்தில் இன்னும் சிறப்பாக இருக்கும் என சேத்தன் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் சேத்தனின் அந்த சிறப்பு பேட்டி இதோ…
 

'நடிகராகவும் மனிதராகவும் விடுதலை படத்திற்கு பின் நடந்த மாற்றங்கள் என்னென்ன?'- மனம் திறந்த சூரியின் ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

'நடிகராகவும் மனிதராகவும் விடுதலை படத்திற்கு பின் நடந்த மாற்றங்கள் என்னென்ன?'- மனம் திறந்த சூரியின் ஸ்பெஷல் பேட்டி இதோ!

அட்டகாசமான ஆரம்பம்... தளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் நுழைந்ததும் படைத்த 3 புதிய சாதனைகள்! விவரம் உள்ளே
சினிமா

அட்டகாசமான ஆரம்பம்... தளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் நுழைந்ததும் படைத்த 3 புதிய சாதனைகள்! விவரம் உள்ளே

சூர்யா திறந்து வைத்த இயக்குனர் ஹரி - ப்ரீத்தா ஹரியின் குட் லக் ஸ்டுடியோஸ்... பிரம்மாண்ட திறப்பு விழாவின் வீடியோ இதோ!
சினிமா

சூர்யா திறந்து வைத்த இயக்குனர் ஹரி - ப்ரீத்தா ஹரியின் குட் லக் ஸ்டுடியோஸ்... பிரம்மாண்ட திறப்பு விழாவின் வீடியோ இதோ!