“வெற்றிமாறன் ஆக்ரோஷமா இருந்தால் தான்...” விடுதலை படப்பிடிப்பில் நடந்த சம்பவம் குறித்து நடிகர் சேத்தன்.. – சுவாரஸ்யமான முழு வீடியோ இதோ.,

வெற்றிமாறன் குறித்து நடிகர் சேத்தன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ - Viduthalai actor chetan about vetri maaran | Galatta

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி முதல் முறையாக கதையின் நாயகனாக நடித்து இவருடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் 'விடுதலை'. RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி ப்ரொடக்ஷன் வழங்க இரண்டு பாகங்களாக எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை தழுவி உருவான இப்படத்தில் முதல் பாகம் கடந்த மார்ச் 31 தேதி உலகமெங்கும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

அட்டகாசமான பீரியட் கிரைம் திரில்லராக உருவான இப்படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி அவர்களுடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் வெற்றிமாறன் படங்களில் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இதுவரை பணியாற்றி வரும் ஒளிப்பதிவாளர் R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். மேலும்  விடுதலை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள விடுதலை பாகம் ஒன்றில் மிக சவாலான ஆக்ஷன் காட்சிகளும் உணர்வு பூர்வமான நடிப்பும் உள்ளதால் ரசிகர்கள் படத்தை மிகப்பெரிய அளவில் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தில் முக்கயமான கதாபத்திரத்தில் நடித்த சேத்தன் அவர்கள் படப்பிடிப்பு தளம் குறித்தும் இயக்குனர் வெற்றிமாறன் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அதில் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்த சவால்கள் குறித்து கேட்கையில் அவர்,  "ஒவ்வொரு நாள் கடும் பாதைகளை தாண்டி தான் படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல வேண்டும். நடிகர்களை தாண்டி நான் அந்த தொழில் நுட்ப கலைஞர்களை தான் இங்கு சொல்லி ஆக வேண்டும். அவ்ளோ பெரிய ஜெனரேட்டர தூக்கிட்டு போவாங்க.. சாப்பாடு கொடுக்கறவங்க பொருட்களை எடுத்து அந்த பாதை வழியா வருவாங்க.. "  என்றார். மேலும் “படத்தில் பிரமாதமான முயற்சியா லைட் இருந்தது னு நான் நினைக்குறேன். இதுவரைக்கும் அந்த மாதிரி லைட் வெச்சு நான் பார்த்ததில்லை. மரங்கள் மீது லைட் கட்டி வெச்சாங்க.‌மரம் ஏறும் பசங்கள வெச்சு எல்லா இடத்துலையும் லைட் கட்ணாங்க.. அந்த பெரும்பாலும் காட்சிகள் இரண்டாம் பாதியில் தான் வரும்.” என்றார்.

இயக்குனர் வெற்றிமாறன் படப்பிடிப்பு தளத்தில் ஆக்ரோஷமாக இருப்பது குறித்து கேட்கையில், "வெற்றி மாறன் ஆக்ரோஷமா படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் தானே வேலையே நடக்கும். இல்லனா அப்படியே விட்டுட்டீங்கனா வேலை நினைச்சா போல நடக்காது. வெற்றி மாறன்  காட்சி படமாக்கும் போது தான் ஆக்ரோஷமா  மும்முரமா இருப்பார். ஒரு காட்சி எடுத்து முடித்ததும் வேறு காட்சி எடுப்பதற்கான நேரத்தில் வெற்றி மாறன் சார் யாரையும் எதுவும் சொல்ல மாட்டார்.” என்றார். படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து கேட்கையில் அவர், “படத்தில் இந்த மாதிரி கதாபாத்திரத்திரம் கோணத்தில் என்ன பார்த்ததே இல்ல.. எனக்கு நகைச்சுவை பண்ணனும் னு ஆசையா இருக்கும். ஆனா நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு என்னை பொருட்படுத்தவே மாட்டார்கள். சீரியஸான ஆள். பாவமானா ஆள் என்றே கதாபாத்திரத்திரம் வரும். ஆனா நகைச்சுவை கதாபாத்திரம் செய்து விட்டேன். அதே நேரத்தில் வில்லனா எனக்கு நடிக்கனும் னு ஆசை ஆனால் அந்த வாய்ப்பை யாரும் தரவில்லை.  ஒருவரை அந்த கதாபாத்திரத்தில் பார்த்து விட்டால் அதே கதாபாத்திரம் தொடர்ந்து வரும் நம் சினிமா துறை இப்படி தான் இயங்கும்.  இந்த மாதிரி ஒரே மாதிரியான விஷயங்களை உடைப்பதை வெற்றிமாறன் எளிதாக செய்வார். அதே போல் தான் சூரி கதாநாயகனாக நடிப்பதும்.” என்றார் நடிகர் சேத்தன்.

மேலும் நடிகர் சேத்தன் விடுதலை படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான பல தகவல்கொண்ட முழு வீடியோ இதோ..

விடுதலை பட உதவி இயக்குனர்களுக்கு வெற்றிமாறன் கொடுத்த பரிசு.. குவியும் பாராட்டுகள் – விவரம்  இதோ..
சினிமா

விடுதலை பட உதவி இயக்குனர்களுக்கு வெற்றிமாறன் கொடுத்த பரிசு.. குவியும் பாராட்டுகள் – விவரம் இதோ..

முகேஷ் அம்பானியை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்.. காரணம் இது தான்.. – விவரம் இதோ..
சினிமா

முகேஷ் அம்பானியை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்.. காரணம் இது தான்.. – விவரம் இதோ..

சினிமா

"நீங்க நடிக்க வேண்டாம் " முதல்நாள் படப்பிடிப்பில் சூரியிடம் வெற்றி மாறன்.. - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..