பக்கா மாஸாக இன்ஸ்டாகிராமில் இணைந்த தளபதி விஜய்க்கு முன்னணி நட்சத்திரங்கள் வரவேற்ப்பு... அசத்தலான பட்டியல் இதோ!

இன்ஸ்டாகிராமில் இணைந்த தளபதி விஜயை வரவேற்ற நட்சத்திரங்கள்,celebrities welcoms thalapathy vijay on instagram | Galatta

தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகராக விளங்கும் தளபதி விஜய் தற்போது இன்ஸ்டாகிராம் தளத்தில் இணைந்துள்ளார். முன்னதாக இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தையே வெற்றியோடு தொடங்கிய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டைனராக பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தளபதி 67 திரைப்படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். பீஸ்ட் திரைப்படத்தின் சமயத்தில் இருந்தே தளபதி 67 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிக்க ஆரம்பித்தன. அதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி மற்றும் விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றி ஆகியவை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 67-வது திரைப்படமான லியோ திரைப்படத்திற்கு இந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தின. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகும் இந்த லியோ திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் கௌதம் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோரோடு பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக 50 நாட்களுக்கு மேல் நடைபெற்ற லியோ திரைப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் சென்னையில் தொடங்க உள்ளது. வருகிற ஜூன் 22ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்த நாளன்று லியோ திரைப்படத்தின் அட்டகாசமான அறிவிப்பு வரும் என தயாரிப்பாளர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் தளபதி விஜய் தற்போது இன்ஸ்டாகிராமில் நுழைந்திருக்கிறார். என்ட்ரி கொடுத்த சில நிமிடங்களிலேயே ஒட்டுமொத்த சமூக வலைதளத்தின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த தளபதி விஜய் இந்தியாவிலேயே மிக வேகமாக ஒரு மில்லியன் ஃபாலோவர்களை பெற்ற நட்சத்திரமாகவும் உலக அளவில் மூன்றாவது வேகமான ஒரு மில்லியன் ஃபாலோவர்களை பெற்ற நட்சத்திரமாகவும் சாதனை படைத்தார். கிட்டத்தட்ட 16 மணி நேரங்களில் நான்கு மில்லியன் ஃபாலோவர்கள் தளபதி விஜயை பின் தொடர்ந்துள்ளனர். இதில் கீர்த்தி செட்டி, சம்யுக்தா, பொன்னியின் செல்வனில் பூங்குழலியாக கலக்கிய ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பிக் பாஸ் முகேன் ராவ் உட்பட பல்வேறு பிரபலங்களும் தளபதி விஜயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்கின்றனர். 

முன்னதாக தளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் நுழைந்ததும், நடிகர் சிலம்பரசன்.TR அவரை வரவேற்கும் விதமாக தளபதி விஜயின் புகைப்படத்தை தனது ஸ்டேட்டஸில் வைத்து WELCOME TO தளபதி விஜய் அண்ணா என வரவேற்றார். அவரைத் தொடர்ந்து நடிகர் பிருத்விராஜ் WELCOME TO THE INSTA WORLD BROTHER! என தளபதி விஜயை வரவேற்றார். மேலும் பிகில் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை அமிர்தா ஐயர், WELCOME TO THE INSTA WORLD COACH என வரவேற்க, அதே படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வர்ஷா பொல்லம்மா கமெண்ட்டில் Coach? நீங்களா? என கமெண்ட் செய்தது ரசிகர்களிடையே மிக ட்ரெண்ட் ஆனது. இன்ஸ்டாகிராமில் தளபதி விஜய் பதிவிட்ட அவரது முதல் புகைப்படம் 104 நிமிடங்களுக்குள் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்று மேலும் ஒரு சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. தனது வழக்கமான ஸ்டைலில் ஹலோ நண்பாஸ் & நண்பீஸ் என இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த தளபதி விஜய் நேற்று சர்ப்ரைஸாக ஸ்டேட்டஸில் புதிய புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டார். கடந்த 24 மணி நேரமாக இன்ஸ்டாகிராமை பொறுத்த வரைக்கும் ட்ரெண்டாக இருப்பது தளபதி விஜய் தான் என சொல்லாம். தளபதி விஜயின் அந்த இன்ஸ்டாகிராம் பதிவு இதோ…
here is the list of thalapathy vijay 5 mass moments in social media here is the list of thalapathy vijay 5 mass moments in social media here is the list of thalapathy vijay 5 mass moments in social media here is the list of thalapathy vijay 5 mass moments in social media

“கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்” தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்.. – ரசிகர்களால் வைரலாகும் தகவல் இதோ...
சினிமா

“கில்லர்.. கில்லர்.. கேப்டன் மில்லர்” தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்.. – ரசிகர்களால் வைரலாகும் தகவல் இதோ...

சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்த  ஹிப் ஹாப் ஆதி.. அனிருத் குரலில் வெளியானது ‘தண்டர்காரன்’ ப்ரோமோ.. –  அட்டகாசமான முதல் பாடல் இதோ..
சினிமா

சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்த ஹிப் ஹாப் ஆதி.. அனிருத் குரலில் வெளியானது ‘தண்டர்காரன்’ ப்ரோமோ.. – அட்டகாசமான முதல் பாடல் இதோ..

தயவுசெய்து COMPARE பண்ணாதீங்க... கைதி ரீமேக் போலா பட விமர்சனங்களுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் SRபிரபு! விவரம் உள்ளே
சினிமா

தயவுசெய்து COMPARE பண்ணாதீங்க... கைதி ரீமேக் போலா பட விமர்சனங்களுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் SRபிரபு! விவரம் உள்ளே