சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்த ஹிப் ஹாப் ஆதி.. அனிருத் குரலில் வெளியானது ‘தண்டர்காரன்’ ப்ரோமோ.. – அட்டகாசமான முதல் பாடல் இதோ..

ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் வீரன் படத்தின் பாடல் வெளியானது - Hip hop aadhi veeran movie first single released | Galatta

தமிழ் சினிமாவில் பன்முக திறன் கொண்ட கலைஞர்களில் சம கால இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த கலைஞன் ஹிப் ஹாப் தமிழா ஆதி. தமிழ் திரையுலகில் வருவதற்கு முன்னரே தன் சுயாதீன ராப் பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆதி பின் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகாராக தன் பயணத்தை தொடங்கி கவனத்தை ஈர்த்தார். பின் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ஆம்பள படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி,சிவ கார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து இன்று வெற்றிகரமான இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். நவீன நாகரீக உலகில் புது புது தொழில்நுட்பங்களில் ரசிகர்கர்களின் ரசனை தன்மையை படத்திற்கு படம் மெருகூட்டும் இசையமைப்பளர்களில் ஆதி முக்கியமானவர். அதன்படி தொடர்ந்து பல படங்களில் இசையமைத்தும் நடித்தும் வருகிறார். அதன்படி ஆதி வேல்ஸ் தயாரிப்பில் ‘பீ.டி சார்’ படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் பிரபல ஹிட் திரைப்படமான ‘மரகத நாணயம்’ பட இயக்குனர் ARK சரவணன் இயக்கத்தில் சத்திய ஜோதி தயாரிப்பில் நடித்து வரும் திரைப்படம் ‘வீரன்’ வித்யாசமான சூப்பர் ஹீரோ கதைகளத்தில் உருவாகி வரும் இப்படத்தின் அறிவிப்பிளிருந்தே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. பேண்டசி திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘தண்டர் காரன்’ என்ற முதல் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.  இப்பாடலில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் அவர்களின் கதாபாத்திரங்கள் குறித்த அறிமுகமும் இடம் பெற்றுள்ளது. அதன்படி ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடிக்கும் வீரன் படத்தில் கதாநாயகியாக ஆதிரா செல்வி கதாபத்திரத்திலும்  நாராயணனாக காளி வெங்கட், பெருசு என்ற கதாபாத்திரத்தில் முனீஸ்காந்த், மாப்பிள்ளை முருகேசன் கதாபாத்திரத்தில் முருகானந்தம் மற்றும் நக்கலைட்ஸ் சசி சர்க்கரை யாக நடிக்கின்றார்.  

ஹிப் ஹாப் ஆதி இசையில் பாடலாசிரியர் விவேக் எழுதிய இப்பாடலை பாடியுள்ளார் பிரபல இசையமைப்பாளர் அனிரூத். இந்த பாடல் மூலம் அனிரூத் - ஹிப் ஹாப் ஆதி கூட்டணி  எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, கத்தி, மற்றும் மிஸ்டர் லோக்கல்  ஆகிய படங்களை தொடர்ந்து ஐந்தாவது முறையாக இணையவுள்ளனர். துள்ளலான இசையில் வெளியாகியுள்ள இப்பாடலில் சிறப்பு காட்சிகள் இடம் பெற்றுள்ளது, மேலும் பாடலுக்கு நடன கலைஞர் சதீஷ் நடன வடிவமைப்பு செய்துள்ளார். தற்போது இந்த பாடல் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஹிப் ஹாப் ஆதி நடித்த முந்தைய படங்கள் சரியான அளவு வரவேற்பு கிடைக்கவில்லை அவரது திரைப்பயணத்தில் திருப்புமுனையாக வீரன் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

 

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவிற்காக புது உச்சம் தொட்ட ARரஹ்மான்... பிரம்மிப்பூட்டும் அசத்தலான அறிவிப்பு இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவிற்காக புது உச்சம் தொட்ட ARரஹ்மான்... பிரம்மிப்பூட்டும் அசத்தலான அறிவிப்பு இதோ!

சினிமா

"விடுதலை வாத்தியார் கதாபாத்திரம் இப்படிதான் வந்துச்சு" உண்மையை உடைத்த எழுத்தாளர் ஜெயமோகன் - சுவாரஸ்யமான வீடியோ இதோ..

“வெற்றிமாறன் எங்கிட்ட Discuss பண்ணல..” – எழுத்தாளர் ஜெயமோகன் விடுதலை படம் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல் – அட்டகாசமான நேர்காணல் இதோ..
சினிமா

“வெற்றிமாறன் எங்கிட்ட Discuss பண்ணல..” – எழுத்தாளர் ஜெயமோகன் விடுதலை படம் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல் – அட்டகாசமான நேர்காணல் இதோ..