தமிழ் சினிமாவின் மிக முக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அரண்மனை 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. மேலும் நடிகராகவும் சுந்தர்.C நடிப்பில் வல்லான், தலைநகரம் 2 & ஒன் 2 ஒன் ஆகிய திரைப்படங்கள் தற்போது தயாராகி வருகின்றன.

முன்னதாக கலகலப்பு 2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் ஜீவா மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காஃபி வித் காதல். இத்திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ஜெய் மற்றும் சுந்தர்சி இணைந்து நடித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

AVNI டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரித்துள்ள சைக்கோ திரில்லர் திரைப்படமாக வெளிவர உள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தை இயக்குனர் பத்ரி நாராயணன் எழுதி இயக்கியுள்ளார். ஹனி ரோஸ் கதாநாயகியாக நடிக்க, இமான் அண்ணாச்சி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், நவநீத்.S இசையமைத்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்திற்கு ஃபின்னி ஆலிவர்.S படத்தொகுப்பு செய்துள்ளார். 

இந்நிலையில் பட்டாம்பூச்சி திரைப்படத்திலிருந்து ஜெயில் குத்து பாடல் தற்போது வெளியானது. இந்த ஜெயில் குத்து பாடலுக்கு நடிகர் ஜெய் இசை அமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் தேவா இப்பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கலக்கலான ஜெயில் குத்து பாடல் இதோ…