பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் ராதே ஷ்யாம்.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.

UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்,மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக ஆக்ஷன் மோடில் இருந்த பிரபாஸ் இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்குகிறார்.இந்த படத்திற்க்கு Dear Comrade,மான்ஸ்டர்,பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவுக்கு வந்தது.

இந்த படம் முதலில் ஜூலை 30 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது பின்னர் இந்த படம் 2022 பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது.பொங்கலுக்கு தெலுங்கில் உள்ள பெரிய ஹீரோக்கள் படம் மேலும் சில அடுத்தடுத்து ரிலீஸை அறிவித்தனர்,இதனை தொடர்ந்து சில படங்கள் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.படம் திட்டமிட்டபடி ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதிசெய்துள்ளனர்.