தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் நடிப்பில் இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னிச்சிறகுகள், இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன் மற்றும் இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து தயாராகிவருகின்றன. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தில் இயக்கி நடிப்பதன் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனர் அவதாரமும் எடுக்கிறார்.

முன்னதாக விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி வெளிவந்த கோடியில் ஒருவன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார். 

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் T.D.ராஜா தயாரிப்பில், இன்ஃபினிட்டி ஃபிலிம் வெனட்சர்ஸ் வழங்கும் கோடியில் ஒருவன் படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ்.K.பிரசன்னா இசையமைக்க, N.S.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள கோடியில் ஒருவன் திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நான் வருவேன் என்னும் இந்த பாடல் வீடியோ தற்போது யூடியூபில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.