செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.இந்த தொடரில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் சரண்யா.இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இதனை தொடர்ந்து தெலுங்கில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார்.இந்த தொடரை அடுத்து தமிழில் மீண்டும் ரன் என்ற தொடரில் நடித்திருந்தார் சரண்யா,இந்த தொடர் சில காரணங்களால் கைவிடப்பட்டது.விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று வந்த ஆயுத எழுத்து தொடரில் ஹீரோயினாக இடையில் இணைந்தார் சரண்யா.

இந்த தொடரில் இவர் இணைந்த பின் நல்ல வரவேற்பு கிடைத்தது.ஆனந்த் செல்வன்,மௌனிகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வந்தனர்.250 எபிசோடுகளை கடந்த இந்த தொடர் நிறைவுக்கு வந்தது.சீரியல்களை தவிர சில படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் சரண்யா.இவர் ராகுல் என்பவரை காதலித்து வருகிறார்.இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து சீரியல்களில் நடிக்காமல் இருந்து வந்த சரண்யா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இதற்கான ப்ரோமோ ஷூட் நடைபெற்றுள்ளது , இதுகுறித்த சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இவர் மீண்டும் சீரியலில் நடிப்பதை ரசிகர்கள் பலரும் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.