தமிழ் சினிமாவில் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் சாண்டி மாஸ்டர் முன்னதாக தமிழகத்தின் பல பிரபலமான தொலைகாட்சிகளின் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடன இயக்குனராகவும் நடுவராகவும் பங்குபெற்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சாண்டி மாஸ்டரின் நடனத்திற்கு என தனி ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு.

குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்ட சாண்டி மாஸ்டர் சிறப்பாக விளையாடி பிக்பாஸ் இறுதி சுற்று வரை சென்று இரண்டாம் பரிசு வென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள சாண்டி மாஸ்டர் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் 3:33 .

ஹாரர்-த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள 3:33 திரைப்படத்தை பேம்பூ ட்ரீ புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் T.ஜீவிதா கிஷோர் தயாரிக்க இயக்குனர் நம்பிக்கை சந்துரு எழுதி இயக்கியுள்ளார். சாண்டி மாஸ்டர் உடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக சாண்டியின் புதிய மியூசிக் வீடியோவாக செம்ம போத பாடல் வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி மாலை 7 மணிக்கு வெளியாகிறது. இசையமைப்பாளர் ஓஃப்ரா இசையில், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில், இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார்.சாண்டி மாஸ்டரே நடன இயக்கம் செய்து நடித்துள்ள கலக்கலான இந்த செம்ம போத பாடலின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.அசத்தலான அந்த போஸ்டர் இதோ…