ஷாருக்கானின் டங்கி படத்தோடு களமிறங்கும் பிரபாஸின் அதிரடியான சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர்... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

பிரபாஸின் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் பட புது ரிலீஸ் தேதி அறிவிப்பு,prabhas in salaar part 1 ceasefire movie new release date announcement | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பிரபாஸின் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக  திகழும் நடிகர் தற்போது பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்சன் ஆக்சன் படமாக தயாராகி வரும் கல்கி 2898 AD திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு வெளிவந்த சஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுரூஷ் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற தவறிய நிலையில் ஒட்டுமொத்த பிரபாஸ் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் தான் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர். 

கே ஜி எஃப் திரைப்படங்களின் மூலம் மிகப்பெரிய கவனம் ஈர்த்த இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படத்தில் மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடிக்க, ஜெகபதிபாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி, சப்தகிரி ஆகியோர் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Hombale Films நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி வரும் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படத்திற்கு புவன் கௌடா ஒளிப்பதிவில் உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளிவரும் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் 1 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு அதன் இரண்டாவது பாகமாக வெளிவந்த கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படம் இமாலய வெற்றி பெற்று இந்திய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துவரும் இந்த சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக செப்டம்பர் 28ஆம் தேதி சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படத்தின் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிவித்தனர். 

இந்த நிலையில் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி சலார் பார்ட்-1 சீஸ்ஃபயர் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பதான் , ஜவான் என ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்திருக்கும் பாலிவுட் சினிமாவின் கிங் கான் ஷாருக் கான் முன்னாபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ் மற்றும் பிகே படங்களின் இயக்குனர் ராஜ்குமார் இராணி இயக்கத்தில் நடித்திருக்கும் டங்கி திரைப்படமும் அதே டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

𝐂𝐨𝐦𝐢𝐧𝐠 𝐁𝐥𝐨𝐨𝐝𝐲 𝐒𝐨𝐨𝐧!#SalaarCeaseFire Worldwide Release On Dec 22, 2023.#Salaar #Prabhas #PrashanthNeel @PrithviOfficial @shrutihaasan @hombalefilms #VijayKiragandur @IamJagguBhai @sriyareddy @bhuvangowda84 @RaviBasrur @shivakumarart @vchalapathi_art @anbarivpic.twitter.com/IU2A7Pvbzw

— Hombale Films (@hombalefilms) September 29, 2023