“சிங்கம் எறங்குனா காட்டுக்கே விருந்து!”- பக்கா மாஸாக வந்த தளபதி விஜயின் ACTION PACKED லியோ பட BADASS பாடல் இதோ!

தளபதி விஜயின் லியோ பட 2வது பாடலான BADASS பாடல் வெளியீடு,thalapathy vijay in leo movie second single badass song out now | Galatta

ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடலாக BADASS பாடல் தற்போது வெளிவந்தது. கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி ஆகிய படங்களுக்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் தளபதி விஜய் உடன் லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத் ஆக்சன் கிங் அர்ஜுனனின் கதாபாத்திரங்களான ஆண்டனி தாஸ் , ஹெரால்டு தாஸ் சகோதரர்களுடன் மற்றொரு சகோதரராக லியோ தாஸ் என்ற கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடித்திருக்கிறார் என தெரிகிறது .

முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் உலகெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸாக இருக்கிறது.எனவே இறுதி கட்டப் பணிகளும் மிரட்டலான VFX பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்ற கழுதைப்புலி உடனான சண்டைக் காட்சியின் VFX பணிகள் அனைத்தும் தற்போது பெங்களூரில் உள்ள முன்னணி VFX நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதனிடையே பிரம்மாண்டமான லியோ இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என ரசிகர்கள் எல்லோரும் ஆவலோடு காத்திருந்த நிலையில் அதிகப்படியான டிக்கெட்டுகள் கோரிக்கை ஏற்பட்டதாலும் சில பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரித்திருக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. முன்னதாக தளபதி விஜயின் லியோ படத்தின் முதல் பாடலாக வெளிவந்த “நா ரெடி” பாடல் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வைரல் ஹிட்டான நிலையில், அடுத்தடுத்து டீசர் மற்றும் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தளபதி விஜயின் லியோ படத்தின் இரண்டாவது பாடலாக #Badass என்ற பாடல் தற்போது வெளிவந்துள்ளது. ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து பாடி இருக்கும் இந்த BADASS பாடலையும் நான் ரெடி பாடலை எழுதிய விஷ்ணு எடவன் எழுதியிருக்கிறார். நா ரெடி பாடலை தொடர்ந்து அடுத்த ரிப்பீட் மோட் பாடலாக தற்போது வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் அந்த BADASS பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.