விஜய் ஆண்டனி - கௌதம் வாசுதேவ் மேனன் இணையும் புதிய படம்... ரசிகர்களை ஈர்த்த மிரட்டலான டைட்டில் & மோஷன் போஸ்டர் இதோ!

விஜய் ஆண்டனி கௌதம் வாசுதேவ் மேனனின் ஹிட்லர் பட மோஷன் போஸ்டர்,vijay antony gautham vasudev menon in hitler movie motion poster | Galatta

முதல் முறையாக விஜய் ஆண்டனி மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் புதிய பொலிடிகல் திரில்லர் படமான ஹிட்லர் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் விஜய் ஆண்டனி அவர்கள் நடிப்பில் கடைசியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த க்ரைம் திரில்லர் படமான கொலை திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து வரிசையாக விஜய் ஆண்டனி நடிப்பில் வித்தியாசமான கதை களங்களில் அடுத்தடுத்த படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழ் படம் படத்தின் இயக்குனர் CS.அமுதன் அவர்களின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வித்தியாசமான பொலிட்டிக்கல் திரில்லர் படமாக அடுத்து வெளிவர தயாராகி இருக்கும் ரத்தம் திரைப்படம் வருகிற அக்டோபர் 6ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

ஏற்கனவே மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உருவான ஆக்ஷன் திரைப்படமான அக்னி சிறகுகள் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. வருகிற அக்டோபர் மாதத்தில் அக்னி சிறகுகள் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். முன்னதாக ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் எனும் படத்தில் தற்போது நடித்து வரும் விஜய் ஆண்டனி முதல் முறை ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் ரோமியோ எனும் புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

இந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்த புதிய திரைப்படமாக தயாராக இருக்கிறது ஹிட்லர் திரைப்படம். இந்த ஹிட்லர் திரைப்படத்தில் முதல்முறையாக விஜய் ஆண்டனி உடன் இணைந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் கதாநாயகியாக ரியா சுமன் நடிக்கிறார். முன்னதாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கோடியில் ஒருவன் மற்றும் அடுத்த சில தினங்களில் வெளிவர இருக்கும் ரத்தம் ஆகிய திரைப்படங்களின் பாணியில் அடுத்த பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக இந்த ஹிட்லர் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் தனா எழுதி இயக்கம் இந்த ஹிட்லர் திரைப்படத்தை செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. நவீன் குமார்.I ஒளிப்பதிவில் உதயக்குமார் கலை இயக்கம் செய்ய சங்கத்தமிழன் படத்தொகுப்பு செய்யும் இந்த ஹிட்லர் திரைப்படத்திற்கு விவேக் மற்றும் மெர்வின் இணைந்து இசை அமைக்கின்றனர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு & ஹிந்தி என ஐந்து மொழிகளில் பேன் இந்தியா படமாக ஹிட்லர் திரைப்படத்தை வெளியிடப் பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த ஹிட்லர் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளிவந்தது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஹிட்லர் திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.