தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் நட்சத்திரம் நகர்கிறது.

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விரைவில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து முதல் முறையாக சீயான் விக்ரமுடன் இணைகிறார் பா.ரஞ்சித். இந்த புதிய படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. 

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் வேட்டுவம் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவில் வேட்டுவம் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு பா.ரஞ்சித் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த ரைட்டர் & குதிரைவால் ஆகிய திரைப்படங்களை தனது நீளம் புரொடக்ஷன்ஸ் வாயிலாக வழங்கிவரும் பா.ரஞ்சித் தயாரித்துள்ள J.பேபி திரைப்படம் அடுத்ததாக ரிலீஸாக தயாராகி வருகிறது.

இந்நிலையில் நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பின் அடுத்த படமாக தயாராகும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், நீலம் புரோடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் இப்படத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் சஞ்சனா நடராஜன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ…
 

#PaRanjith's @officialneelam next with #Balloonpictures shoot starts today! @beemji @Dhinakaranyoji@arunbalajitn @balloonpicturez @gurusoms @sanchana_n @pro_guna pic.twitter.com/DPMdvhsFtO

— Neelam Productions (@officialneelam) June 13, 2022