ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளதோடு பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாஸில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நரேன், செம்பன் வினோத், ஜாபர், காளிதாஸ் ஜெயராம், சந்தானபாரதி, வசந்தி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்ரம் படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது.

பக்காவான ஆக்ஷன் ப்ளாக் திரைப்படமாக தயாராகி இருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்குனர்களாக காட்சிக்கு காட்சி ஸ்டண்ட்டில் அதிரடி காட்டி உள்ளனர். மேலும் கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில் சில முன்ராஜ் படத்தொகுப்பு செய்ய ராக்ஸ்டார் அனிருத் இசையில் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் விதமான புது அனுபவத்தை விக்ரம் திரைப்படம் கொடுத்துள்ளது.

க்ளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும் அந்த சிறிய நேரத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் ஒட்டுமொத்த திரையரங்குகளை அதிர வைத்தார் சூர்யா. இந்நிலையில் தற்போது விக்ரம் திரைப்படத்திலிருந்து புதிய SNEAK PEEK வீடியோ வெளியாகியுள்ளது. வைரலாடும் அந்த வீடியோ இதோ…