பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்பவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா-இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் சில தினங்களுக்கு முன் மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்நது அடுத்த நாளே திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம் செய்தனர்

முன்னதாக பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜுடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள கோல்ட் திரைப்படம் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.அடுத்ததாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து லூசிஃபர் படத்தின் ரீமேக்காக காட்ஃபாதர் படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் G.S.விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் த்ரில்லர் படமாக தயாராகியிருக்கும் திரைப்படம் O2. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள O2 திரைப்படத்தில் பிரபல யூட்யூபர் ரித்விக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

O2 திரைப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசாகிறது. O2 திரைப்படத்திற்கு தமிழ்.A.அழகன் ஒளிப்பதிவில் செல்வா.R.K படத்தொகுப்பு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் O2 திரைப்படத்திலிருந்து வானம் யாவும் பாடல் தற்போது வெளியானது. ரம்மியமான அந்த பாடல் இதோ…