“என் பணத்தில் கார், பங்களா.. ஆனால் வாழ்க்கை மட்டும் மற்றொருவருடனா? பிரபல நடிகை ராக்கி சவந்த் மீது முன்னாள் கணவர் குற்றச்சாட்டு..

பாலிவுட் சினிமாவில் நடிகை ராக்கி சவந்த் என்றால், தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு பாலிவுட் சினிமாவில் படு கவர்ச்சி நடிகையாக அறியப்படுபவர் ராக்கி சவந்த். 

நடிகை ராக்கி சவந்த், சினிமாவையும் தாண்டி பாலிவுட் பிக்பாஸ் 15 வது சீசனில் கலந்துகொண்டு இன்னும் கலக்கியவர். இதனால், நடிகை ராக்கி சவந்த், பாலிவுட்டில் இன்னும் பிரபலமடைந்தார்.

எந்த அளவுக்கு பாலிவுட்டில் நடிகை ராக்கி சவந்த், பிரபலம் அடைந்தாரோ, அந்த அளவுக்கு அவரைப் பற்றிய சர்ச்சைகள் சுற்றாமல் இல்லை.

அதாவது, பாலிவுட் சினிமாவின் படு கவர்ச்சி நடிகையான ராக்கி சவந்தின் முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங், “எனது சமூக கணக்குகளை முடக்கி விட்டார்” என்று, ரித்தேஷ் மீது அந்த நடிகை நேற்றைய தினம் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற  நடிகை ராக்கி சவந்த், தனது காதலரான அடில் கானுடன் காவல் நிலையம் சென்றிருந்தார்.

பின்னர், அங்கள்ள செய்தியாளர்களிடம் பேசிய அந்த நடிகை, “எனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் மெயில் கணக்கை எல்லாம் எனது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங் முடக்கிவிட்டார்” என்றும், குற்றம்சாட்டினார்.

மேலும், அப்போது செய்தியாளர்கள் முன்பு அழுது நடிகை ராக்கி சவந்த். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது, பிக் பாஸ் 15 சீசனில் கலந்துகொண்டு விட்டு வெளியேறிய பிறகு நடிகை ராக்கி சவந்த், தனது கனவரை பிரிந்தனர். அப்போது, “முதல் திருமணம் நடந்து மட்டுமில்லாமல், அவரது மனைவியிடம் விவாகரத்து பெறாமல், அதனை மறைத்து அவர் என்னை காதலித்து உள்ளார்” என்றும், ராக்கி அப்போது பகிரங்கமாக குற்றச்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் தான், தனது முன்னாள் மனைவி ராக்கி சவந்தின் புகார் குறித்து விளக்கம் அளித்த அவரது முன்னாள் கணவர் ரித்தேஷ் சிங், “ராக்கி சவந்த் குற்றச்சாட்டுகளுக்கு சட்டப்பூர்வ முறையில் பதில் அளிப்பேன்” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “கோடிக்கணக்கில் நான் ராக்கி சவந்திற்காக பணம் வாரி இறைத்திருக்கிறேன் என்றும், அதனை பெற்று கொள்ளும் போது, அவருக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்றும், நான் செலவு செய்வது நின்றவுடன், இது போன்ற குற்றச்சாட்டுகளை என் மீது அவர் சுமத்துகிறார்” என்றும், எதிர் குற்றச்சாட்டை சுமத்தினார். 

மேலும், “இன்ஸ்டாகிராம் பதிவால் உறவு முடிந்து போனது பற்றி இதற்கு முன் நீங்கள் கேள்விபட்டு உள்ளீர்களா?” என்றும், அவர் செய்தியாளர்களிடம் எதிர் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “வருங்காலத்தில், அவதூறு ஏற்படுத்த என் மீது இன்னும் பல குற்றச்சாட்டுகளை கூட அவர் கூறுவார் என்றும். அவரும், அவரது காதலன் அடில் கானும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல விரும்பினோம் என்று கூட சொல்வார்” என்றும், கூறினார். 

முக்கியமாக, “அவரால் இந்த நாடகம் போட மட்டுமே முடியும் என்றும், அவரை விட்டு விலகி விட்டேன் என்றும், இப்போது நான் என் வாழ்வில் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்” என்றும், குறிப்பிட்டார். 

“3 ஆண்டுகளாக அவர் என்னை பயன்படுத்தி வந்து உள்ளார் என்றும், அவரிடம் ஒரு கார் கூட அப்போது கிடையாது என்றும், அவர் வீட்டில் எந்த பொருட்களும் கிடையாது” என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

குறிப்பாக, “அவரது வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் எல்லாம் எனது பணத்தில் வாங்கியவை என்றும், நான் வாங்கி கொடத்த வீடு, கார் உள்ளிட்ட எல்லாவற்றையும் பயன்படுத்தி கொண்டு, வெட்கமே இல்லாமல் அவரது வீட்டில் சட்ட விரோதமான முறையில் இன்னொருவருடன் அவர் சேர்ந்து இருப்பது மட்டும் சரியா?” என்றும், நடிகை ராக்கி சவந்த் மீது அவரது முன்னாள் கணவரான ரித்தேஷ் சிங் பகிரங்கமாக குற்றச்சாட்டி கேள்வி எழுப்பினார். 

இதனால், இந்த இருவரின் சண்டை தற்போது பாலிவுட் திரையுலகில் பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.