தமிழ் திரை உலகின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக திகழ்ந்த T.ராஜேந்திர் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது வயிற்றுப் பகுதியில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உயர் சிகிச்சைக்காக கடந்த ஜூன் 14-ஆம் தேதி T.ராஜேந்தர் அவர்கள் அமெரிக்கா சென்றார். 

முக்கியமான அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், T.ராஜேந்தர் அவர்களின் உடல்நிலை தேறி வருவதாக தகவல்கள் வெளிவந்தன. தொடர்ந்து தனது மகனும் நடிகருமான சிலம்பரசன்.TR உடன் T.ராஜேந்தர் இருக்கும் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி T.ராஜேந்தர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளிவந்தன. 

இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற பிரபல நடிகர்களான திரு.நெப்போலியன் மற்றும் திரு.பாண்டியராஜன் இருவரும் T.ராஜேந்தர் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். இவர்களின் இந்த சந்திப்பின்போது பூரண குணமடைந்து வரும் T.ராஜேந்தர் அவர்கள் இந்த சந்திப்பு குறித்து அவருக்கே உரித்தான ஸ்டைலில் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து நெப்போலியன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

அன்பு நண்பர்களே , தமிழ்ச்சொந்தங்களே,
FeTNA 2022 நிகழ்ச்சிக்காக நான் 4 நாட்கள் New York நகருக்குச் சென்றிருந்தேன்..! அங்கு மரியாதைக்குறிய அண்ணன் T Rajendar அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிலிருந்து வந்திருந்தார்..! நாங்கள் அந்த தகவல் கிடைத்ததும் நானும், எனது நண்பர் பாண்டியராஜனும் அவரை சந்திக்க நேரில் சென்றோம்..! அந்த தருணம் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள் ..! TR அவர்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தோம்..! அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..!!

 
என குறிப்பிட்டு அந்த வீடியோவையும் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)