நெட்ஃபிலிக்ஸ் தனது நேரடி தமிழ் படமான நவரசாவை சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. மணி ரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் வழங்கியுள்ள ஒன்பது திரைப்படங்களின் தொகுப்பாகும் இது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை இந்தப் படங்கள்.

தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த திறமையாளர்களை நவரசா ஒன்றிணைக்கிறது. இந்த அற்புதமான தொகுப்பில், அரவிந்த் சுவாமி, பிஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி. ஆனந்த், பொன்ராம், ரதிந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் ஒன்பது இயக்குநர்கள் ஒவ்வொரு உணர்ச்சியிலும் தங்களின் தனித்துவமான பார்வையைக் கொண்டு வருவதில் நம்புதற்கரிய திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

சூர்யா,விஜய்சேதுபதி,அரவிந்த் சுவாமி,சித்தார்த் என பல முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தில் நடித்து அசத்தியுள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தங்களது 2021 ரிலீஸ்கள் குறித்து நெட்ஃபிலிக்ஸ் ஒரு ப்ரோமோ வீடீயோவை வெளியிட்டுள்ளனர்.இதில் நவரசா படத்தின் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளது,இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்