சூர்யா 40 திரைப்படம் பற்றிய சுவையூட்டும் அப்டேட் !
By Sakthi Priyan | Galatta | January 24, 2021 14:13 PM IST
2020 தீபாவளிக்கு வெளியான சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு, பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இது சூர்யா நடிப்பில் உருவாகும் 40-வது படமாகும். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சூர்யா 40 என அழைத்து வருகிறார்கள்.
தற்போது இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று (ஜனவரி 24) இமானின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
தற்போது சூர்யா 40 படத்தின் ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு எனத் தீவிரமாக பணிபுரிந்து வருகிறது படக்குழு. சூர்யாவுக்கு நாயகியாக டாக்டர் படத்தில் நடித்துள்ள ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
பிப்ரவரி மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். முதல்முறையாக சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதாலும், ஜல்லிக்கட்டு தொடர்புடைய கதை என்பதாலும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நவரசா ஆந்தாலஜியும் சூர்யா கைவசம் உள்ளது. கவுதம் மேனன் இயக்கி வருகிறார். நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கிறது. வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு சூர்யா-GVM காம்போ இணைவதால் அந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
Music Director @immancomposer will be composing the music for #Suriya40bySunPictures@Suriya_offl #DirectorPandiraj #Suriya40 pic.twitter.com/h5SVfv5pTZ
— Sun Pictures (@sunpictures) January 24, 2021
Bigg Boss 4 Som Shekar's first video after finale, gives a big health update
24/01/2021 02:20 PM
Bigg Boss Julie's kissing prank - video takes social media by storm!
24/01/2021 01:05 PM
D. Imman on board for Suriya 40 | Pandiraj | Sun Pictures
24/01/2021 12:01 PM
Forty-year-old Mumbai actor booked for sexual assault on stepmother, theft
23/01/2021 07:38 PM