ஒவ்வொரு ஆண்டும் நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினத்தை  உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழா அனுசரிக்கப்பட்டு வருகிறது.அதன்படி 466 ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த டிசம்பர் 24 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.

ஸ்தூபி இசை, தாரை தப்பட்டை, நையாண்டி மேளம், பேண்டு வாத்தியங்கள் என கோலாகலமாக நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டத்துடன் விடிய விடிய நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு பெரும் ஆர்பரிப்புடன் நாகூரை வந்தடைந்தது. பின் நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்கா பரம்பரை ஆதீனம் கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார்.

அதை தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பங்கேற்றனர். நாகூர் தர்ஹா சந்தனக்கூடு மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு நாகை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இறைமாண்பை அதிகம் கடைபிடிக்கும் திரைப்பிரபலங்களில் ஒருவரான ஏ.ஆர் ரஹ்மான் 466 ம் ஆண்டு கந்தூரி விழாவில் கலந்து கொள்வதற்காக ஆட்டோவில் வந்து இறங்கினார். பலத்த பாதுகாப்புடன் சந்தனம் பூசும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அங்கிருந்து கிளம்பினார். நாகூர் தர்கா சார்பில் ஏ.ஆர்.ரகுமானுக்கு வரவேற்ப்பு அளிக்கப்பட்டு வழிபாடு செய்து அங்கிருந்து கிளம்பினார். இதனிடையே தர்காவிற்கு ஆட்டோவில் வந்து இறங்கிய வீடியோவை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பலர் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

நாகூர் தர்காவின் 466-ஆம் ஆண்டு கங்தூரி விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்றார். @arrahman #ARRahman #Nagore #NagoreDargah #IsaiPuyal #ARR #Rahman #Galatta pic.twitter.com/qlH10eevyW

— Galatta Media (@galattadotcom) January 3, 2023