மிர்ச்சி சிவா - யோகி பாபு காமெடி கூட்டணியின் காசேதான் கடவுளடா... சர்ப்ரைஸாக வந்த கலகலப்பான ஸ்னிக் பீக் வீடியோ இதோ!

மிர்ச்சி சிவா யோகி பாபுவின் காசேதான் கடவுளடா பட ஸீனீக் பீக் வீடியோ,mirchi shiva yogi babu in kasethan kadavulada movie sneak peek video | Galatta

அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா மற்றும் யோகி பாபு இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் கலக்கியிருக்கும் காசேதான் கடவுளடா திரைப்படத்திலிருந்து சர்ப்ரைசாக ஸ்னீக் பிக் வீடியோ வெளியானது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் காசேதான் கடவுளடா திரைப்படம் கடந்த 1972 ஆம் ஆண்டு வெளிவந்த காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக் ஆகும். முன்னதாக பாலிவுட்டில் வெளிவந்த ஜப் வி மெட் படத்தின் ரீமேக்காக கண்டேன் காதலை, டெல்லி பெல்லி (ஹிந்தி) படத்தின் ரீமேக்காக சேட்டை, நின்னுக் கோரி படத்தின் ரீமேக்காக தள்ளி போகாதே (தெலுங்கு), தி கிரேட் இந்தியன் கிச்சன் (மலையாளம்) படத்தின் தமிழ் ரீமேக்காக அதே பெயரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் என 4 ரீமேக் படங்களை இயக்கிய R.கண்ணன் இயக்கத்தில் 5வது ரீமேக்காக காசேதான் கடவுளடா எனும் அதே டைட்டிலில் இந்த கலகலப்பான திரைப்படம் ரிலீஸாக இருக்கிறது. 

300 முறைகளுக்கு மேல் மேடை நாடகமாக மக்கள் மனதை கவர்ந்து பின்னர் திரைப்படமாக வெற்றி பெற்று என்றென்றும் தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத எவர்கிரீன் திரைப்படமாக திகழும் காசேதான் கடவுளடா திரைப்படத்தை சித்ராலயா கோபு எழுதி இயக்கியிருந்தார். ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், மனோரமா, லட்சுமி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வெளிவந்த காசேதான் கடவுளடா திரைப்படத்தின் ரீமேக்காக தற்போது இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் இந்த காசேதான் கடவுளடா திரைப்படம் தயாராகி இருக்கிறது. இதில் முத்துராமன் கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் சாமியாராக யோகி பாபுவும், ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் கருணாகரனும், மனோரமா கதாபாத்திரத்தில் ஊர்வசி அவர்களும் நடித்துள்ளனர். இவர்களுடன் சிவாங்கி, புகழ், தலைவாசல் விஜய், விடிவி கணேஷ், மறைந்த நடிகர் மனோபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மசாலா பிக்ஸ் மற்றும் எம் கே ஆர் பி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள காசேதான் கடவுளடா திரைப்படத்திற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவில் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட காசேதான் கடவுளடா திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்திற்குள் தொடர்ச்சியாக 35 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது. இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே காசேதான் கடவுளடா திரைப்படம் ரிலீஸாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், E5 என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் திரு. J. ஜெயக் கிருஷ்ணன் அவர்கள் வெளியிட வருகிற மே 26 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் காசேதான் கடவுளடா திரைப்படம் ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக காசேதான் கடவுளடா திரைப்படத்திலிருந்து அட்டகாசமான ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகிள்ளது. ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அந்த ஸ்னீக் பீக் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.
 

சினிமா

"தளபதி68-ல் விஜய் உடன் இணைகிறாரா அஜித்குமார்?"- வெங்கட் பிரபுவின் முதல் மாஸ் அப்டேட்... வைரல் வீடியோ இதோ!

உலகநாயகன் கமல்ஹாசன்-சிலம்பரசன்TR-தேசிங்கு பெரியசாமி அதிரடி கூட்டணியின் STR48 பட வேலைகள் ஆரம்பம்... ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசன்-சிலம்பரசன்TR-தேசிங்கு பெரியசாமி அதிரடி கூட்டணியின் STR48 பட வேலைகள் ஆரம்பம்... ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!

RRR நாயகனின் பிறந்தநாள் பரிசு: பிரம்மாண்டமான JrNTR30 பட மிரட்டலான டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
சினிமா

RRR நாயகனின் பிறந்தநாள் பரிசு: பிரம்மாண்டமான JrNTR30 பட மிரட்டலான டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!