“அப்பா இறப்பதற்கு முன்..” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமியின் மகன்.. - சம்பவம் குறித்து விளக்கும் முழு வீடியோ இதோ..

மயில்சாமி மரணம் குறித்து அவரது மகன் விளக்கும் வீடியோ இதோ - Mayilsamy son emotional interview | Galatta

மிகப்பெரிய காமெடி நடிகரும் மிமிக்ரி கலைஞருமான மயில்சாமி கடந்த பிப்ரவரி 19ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இந்த நிகழ்வு திரையுலகத்தினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி சொக்கத்திற்கு ஆளானது. பின் தொடர்ந்து மயில்சாமி மறைவையொட்டி திரைபிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலிசெலுத்தினர். மேலும் ஏராளமான ரசிகர்கள் அவரது மறைவை நினைத்து தங்கள் வருத்தங்களை சமூக ஊடங்கங்களில் தெரிவித்தும் வந்தனர். சிவராத்திரியை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜையில் இருந்த மயில்சாமி திடீர் மரணமடைந்தது குறித்து சரியான விளக்கம் முன்னதாக அளிக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பல ஊடகங்களில் அவரது மரணத்தை சித்தரித்து பல பொய் தகவல்கள் பரவியது. இந்த வதந்திகளுக்கு முற்றிபுள்ளி வைக்க மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி  பத்திரிகையாளர்களை சந்தித்து மயில்சாமி மரணிப்பதற்கு முன் நிகழ்ந்ததை விளக்கினார். அதில் அவர் பேசியது,

“அப்பா, டப்பிங் முடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின் மாலை சிவராத்திரிக்காக, கேளம்பாக்கம் மேகனாதீஸ்வரர் சிவன் கோயிலுக்கு புறப்பட்டோம். போற வழியில் சாப்பிட்டு விட்டு 8 மணிக்கு கோயிலுக்கு சென்றோம். பின் சிவமணி அவர்களிடம் தொடர்பு கொண்டு கோயிலுக்கு வழி சொன்னார். பின் 11 மணிக்கு இசை கச்சேரி கோயிலில் தொடங்கினோம். அப்பா ரொம்ப அன்னிக்கும் சந்தோஷமா ஜாலியா இருந்தார். பின் நள்ளிரவு 2.45 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது. பின் நாங்கள் வீட்டுக்கு சென்றோம்.  வீட்டுக்கு வந்ததும் பசிக்குது. எதாவது சாப்பிடலாமா என்று கேட்டார். நானும் சரி என்று சொன்னேன்.‌பின் நான் அப்பா, அம்மா மூன்று பேரும் சாப்பிட்டு விட்டு அதன் பின் கொஞ்சம் நேரம் தொலைக்காட்சியில் செய்தி பார்த்து கொண்டிருந்தார். அதன்பின் என்னிடம் சாப்பிட்டது நெஞ்சிலே இருக்கு என்றார். அப்பா அந்த மாதிரி நேரத்தில் சுடுதண்ணீர் குடிப்பார். நான் சுடுதண்ணீர் கொடுத்தேன். பின் அவர் உறங்க சென்றார்.

மீண்டும் வந்து எனக்கு செரிமானம் ஆகவில்லை போல என்றார். நானும் அம்மாவிடம் பாத்துக்கோங்க என்று சொல்லிவிட்டு உறங்க சென்றேன்.பத்து நிமிடத்திலே அம்மா வந்து அப்பாவிற்கு மூச்சு திணறுகிறது என்று என்னை அழைத்தார்.  அப்போதும் அவர் உடல்நிலை குறித்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.அவசர சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு நான் அவரை அழைத்து சென்றேன். கொஞ்சம் நேரத்திலே அப்பா என் மீது சாய்ந்து விழுந்தார்.

எனக்கு என்ன பன்றதுனே தெரில.. பின் என்னால் அவரை வைத்து கொண்டு கார் ஓட்ட முடியவில்லை. ஒரு ஆட்டோவை பிடித்து சென்றேன். பின் மருத்துவமனைக்கு சென்ற போது வரும் வழியிலே உயிர் பிரிந்துவிட்டது என்று மருத்துவர் கூறினார். எனக்கு என்ன பன்றதுனே தெரில. இருந்தாலும் நான் நம்பிக்கையும் விடாமல் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றேன். பின் அங்கு பரிசோதித்த மருத்துவர் இறந்ததை உறுதி செய்தார். அதன்பிறகு வீட்டிற்கு அழைத்து சென்றேன். இதுதான் உண்மையிலே நடந்தது. ஆனால் பத்திரிக்கையிலும் ஊடகங்களிலும் நிகழ்வை தவறாக சித்தரிக்கின்றனர்." என்றார் அன்பு மயில்சாமி. 

மேலும் விவரங்களை பகிர்ந்த அன்பு மயில்சாமியின் வீடியோ இதோ..

“அடியாத்தி இது என்ன Feel uh..” தனுஷ் version ல் வெளியானது வா வாத்தி.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பாடல் இதோ..
சினிமா

“அடியாத்தி இது என்ன Feel uh..” தனுஷ் version ல் வெளியானது வா வாத்தி.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பாடல் இதோ..

பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சந்திரமுகி 2’ படத்தில் இணைந்த பிரபல நடிகை..  - வைரலாகும் கலகலப்பான புகைப்படங்கள் இதோ..
சினிமா

பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சந்திரமுகி 2’ படத்தில் இணைந்த பிரபல நடிகை.. - வைரலாகும் கலகலப்பான புகைப்படங்கள் இதோ..

'கேப்டன் மில்லர்' கெட் அப்பில் தனுஷ்.. அட்டகாசமான புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு - வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

'கேப்டன் மில்லர்' கெட் அப்பில் தனுஷ்.. அட்டகாசமான புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு - வைரலாகும் பதிவு இதோ..