நீண்ட நாளுக்கு பிறகு ‘அந்தகன்’.. சிறப்பு காட்சிகளுடன் வெளியானது கண்ணிலே பாடல்.. - வைரலாகி வரும் அட்டகாசமான பாடல் இதோ..

பிரசாந்த் நடிப்பில் அந்தகன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது - Andhagan second single kannile released | Galatta

கடந்த 2018 ல் பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி மெஹா ஹிட்டான அட்டகாசமான திரில்லர் திரைப்படம் ‘அந்தாதுன். இந்திய முழுவதும் இந்தி மொழியிலே மிகப்பெரிய வெற்றியை பெற்ற அந்தாதுன் தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் மொழியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அப்போதே அறிவிப்பு வெளியானது அதன் படி தமிழ் மொழியின் ரீமேக் உரிமையை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றினார். பின் தன் மகனும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வந்த பிரசாந்த் அதில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. பிரசாந்த் 90 களில் மிகப்பெரிய நட்சத்திரமாகவும் வலம் வந்தவர். நிறைய படங்களை பிளாக் பஸ்டர் கொடுத்தவர். சமீபத்தில் பட வாய்புகள் கிடைக்காமல் இருந்த போது தியாகராஜன் கைப்பற்றிய அந்தாதுன் திரைப்படம் பிராசாந்த் க்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது.

அதன் படி தயாரிப்பளார் எஸ் தாணுவுடன் இணைந்து படப்பிடிப்பு தொடங்கியது இந்த படத்தை தியாகராஜன் அவர்களே திரைக்கதை இயக்கினார். படத்திற்கு அந்தகன் என்று பெயரிட்டனர். இதில் பிராசாந்த் கதாநாயகனாகவும் அவருடன் இணைந்து சிம்ரன், கார்த்திக், பிரியா ஆனந்த், யோகி பாபு, சமுத்திரகனி, வனிதா விஜயகுமார்,  மனோபாலா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன். அதன் படி விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட அந்தகன் படம் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாரானார். ஆனால் படம் நினைத்த நேரத்தில் வெளியாகவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பை தக்க வைத்துள்ள பிராசாந்த்தின்  அந்தகன் திரைப்படம் நீண்ட நாளுக்கு பின் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் இடம் பெற்றுள்ள ‘கண்ணிலே என்ற பாடலை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டு அதனுடன், உங்கள் இதயத்தை மெய்மறக்க செய்யவிருக்கும் கண்ணிலே பாடலை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் இதயத்தை மெய்மறக்க செய்யவிருக்கும் #Kannile பாடலை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் #Andhagan @actorprashanth@actorthiagaraja @SimranbaggaOffc @Music_Santhosh @AdithyarkM @UmadeviOfficial@SonyMusicSouthhttps://t.co/2I0r62WmsL pic.twitter.com/e5vNQ6mCxL

— Kalaippuli S Thanu (@theVcreations) February 23, 2023

சந்தோஷ் நாராயணன் இசையில் உமா தேவி எழுதியுள்ள இப்பாடலை சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் ஆதித்யா பாடியுள்ளார். தற்போது பாடல் வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்து வைரலாகி வருகிறது. இசை சார்ந்த படம் என்பதால் சந்தோஷ் நாராயணன் கூடுதல் ஈடுபாடு செலுத்தி அனைத்து பாடல்களை கொடுத்திருப்பதாக தகவல் வெளியானது அதன் படி கடந்த ஆண்டு ‘என் காதல்’ என்ற பாடல் வெளியானது அதனை தொடர்ந்து தற்போது இந்த பாடலும் ரசிகர்களுக்கு பிடித்தது  போல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

பிரசாந்த் திறமையான நடிகர். 90 களில் மிக முக்கியமான நடிகரான இவர் அதிகளவு ரசிகர்களை தக்கவைத்தவர். இடையில் நிறைய படங்களில் மீண்டு வர முயற்சித்து தோல்வியை தழுவிய இவர் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய பிரசாந்த் ஆக திரும்பவும் திரைத்துறையில் வந்ததை ரசிகர்கள் பெருமளவு வரவேற்றனர். இந்த நிலையில் இந்த அந்தகன் திரைப்படம் வெளியானால்பிரசாந்த் திரைப் பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சந்திரமுகி 2’ படத்தில் இணைந்த பிரபல நடிகை..  - வைரலாகும் கலகலப்பான புகைப்படங்கள் இதோ..
சினிமா

பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சந்திரமுகி 2’ படத்தில் இணைந்த பிரபல நடிகை.. - வைரலாகும் கலகலப்பான புகைப்படங்கள் இதோ..

'கேப்டன் மில்லர்' கெட் அப்பில் தனுஷ்.. அட்டகாசமான புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு - வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

'கேப்டன் மில்லர்' கெட் அப்பில் தனுஷ்.. அட்டகாசமான புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு - வைரலாகும் பதிவு இதோ..

விரைவில் இயக்குனர் விஜயின் ‘அச்சம் என்பது இல்லையே’ .. அருண் விஜய் கொடுத்த அப்டேட் - வைரலாகும் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ..
சினிமா

விரைவில் இயக்குனர் விஜயின் ‘அச்சம் என்பது இல்லையே’ .. அருண் விஜய் கொடுத்த அப்டேட் - வைரலாகும் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ..