'கேப்டன் மில்லர்' கெட் அப்பில் தனுஷ்.. அட்டகாசமான புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு - வைரலாகும் பதிவு இதோ..

வைரலாகும் தனுஷ் புது கெட்டப் படக்குழு பகிர்ந்த புதிய புகைப்படம் இதோ - Captain miller Dhanush unseen pic goes viral | Galatta

தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17 ம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘வாத்தி’ தமிழ் மட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட தெலுங்கு மொழி ‘சார்’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் வருகையை கொடுத்து வருகின்றனர். அதன்படி திரைப்படம் தனுஷுக்கு வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இதே நேரத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’ . 'ராக்கி’, ‘சாணி காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி வருகிறார். 1930 சுதந்திர காலக் கட்ட கதைக்களத்தில் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகவிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். இத்திரைப்படத்திற்காக தனுஷ் வித்யாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார். அந்த தோற்றத்துடனான புகைப்படம் சமீபத்தில் பல புகைப்படங்களாக வெளியாகி அவ்வப்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யா ஜோதி நிறுவனம் தனுஷ் விமான நிலையத்தில் காத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன் “கேப்டன் மில்லர் தோற்றத்தில் எங்கள் ஹீரோவின் அதிகாரபூர்வமற்ற சாதரணமான புகைப்படம்.. இணையத்தை அதிர வைப்பதற்காக..” என்று குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Just an unofficial random click of our hero in #CaptainMiller look shaking the internet 💥🥳

Just @dhanushkraja things 😎👑@ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @priyankaamohan @gvprakash pic.twitter.com/1VeqYLd81L

— Sathya Jyothi Films (@SathyaJyothi) February 23, 2023

பிரம்மாண்ட செட்டுகள் மற்றும் அட்டகாசமான படப்பிடிப்பு தளங்களில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் தயாரித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரபல இசையமைப்பாளர்  ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கோக்கன், மூர், குமரவேல், டேனியல் பாலாஜி, நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும் திபடத்திற்கு லீப் சுப்ராயன் சண்டை வடிவமைப்பு செய்ய ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். மற்றும் இப்படத்திற்கு வசனம் எழுதுகிறார் பிரபல பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்கி. 

முதல் கட்ட படப்பிடிப்பை கடந்த ஆண்டு முடித்துள்ள கேப்டன் மில்லர் படக்குழு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து முன்னோட்டம் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நூலிழையில் உயிர் தப்பிய விஷால்.. 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ இதோ..
சினிமா

நூலிழையில் உயிர் தப்பிய விஷால்.. 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ இதோ..

அடுத்தடுத்த படங்களுடன் வருகிறார் ஜெயம் ரவி.. 'அகிலன்' வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு - ரசிகர்கள் வைரலாக்கி வரும் அட்டகாசமான போஸ்டர்  இதோ..
சினிமா

அடுத்தடுத்த படங்களுடன் வருகிறார் ஜெயம் ரவி.. 'அகிலன்' வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு - ரசிகர்கள் வைரலாக்கி வரும் அட்டகாசமான போஸ்டர் இதோ..

1 ரூபாய் சில்லறைக்கு 2000 ரூபாய் அபராதம்.. - தளபதி விஜயின் ‘தமிழன்’ படத்துடன் ரசிகர்கள் ஒப்பீடு.. விவரம் இதோ..
சினிமா

1 ரூபாய் சில்லறைக்கு 2000 ரூபாய் அபராதம்.. - தளபதி விஜயின் ‘தமிழன்’ படத்துடன் ரசிகர்கள் ஒப்பீடு.. விவரம் இதோ..