பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சந்திரமுகி 2’ படத்தில் இணைந்த பிரபல நடிகை.. - வைரலாகும் கலகலப்பான புகைப்படங்கள் இதோ..

சந்திரமுகி 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து வைரலான கலகலப்பான புகைப்படங்கள் - Most awaited chandramukhi movie set pictures | Galatta

இந்திய சினிமாவில் முக்கிய நடிகரான ரஜினிகாந்த்தின் திரைபயனத்தில் மிக முக்கியமான திரைப்படம் 2005 ல் வெளியான 'சந்திரமுகி'. அட்டகாசமான கதையை சூப்பர் ஸ்டார் வைத்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை இணைத்து இயக்குனர் பி வாசு இயக்கிய சந்திரமுகி திரைப்படம் மிக பெரிய வரவேற்பை பெற்றது. நீண்ட நாள் திரையரங்கில் ஓடி பல சாதனைகளை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பல வருடங்களாக இயக்குனர் பி வாசு முயற்சி வந்துள்ளார். இதனையடுத்து 17 ஆண்டுகள் கழித்து தற்போது 'சந்திரமுகி 2' சாத்தியமாகியுள்ளது. மீண்டும் பி வாசு சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்க முன் வந்துள்ளார். லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் கதாநாயகனாக ராகவா ;லாரன்ஸ் நடிக்கிறார். மேலும் அவருடன் இணைந்து மிக முக்கிய கதாபாத்திரமான சந்திரமுகி பாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் வைகை புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், ரவி மரியா, ஸ்ருஷ்டி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் பிரபல ‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ ஆகிய படங்களின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

sathya jyothi films shares dhanush captain miller unseen look picture goes viralபிரம்மாண்டமான படப்பிடிப்பு தளத்தில் மிக மும்முரமாக நடைபெற்று வரும் சந்திரமுகி திரைப்படத்தில் மகாமுனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், சாட்டை படத்தின் மூலம் புகழ்பெற்ற பிரபல நடிகை மஹிமா நம்பியார் இணைந்துள்ளார். மேலும் இவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் விதத்தில் மஹிமா தனது சமூக வலைத்தளத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதனை உறுதி செய்துள்ளார். புகைப்படத்துடன்  அவர், "அற்புதமான நடிகரும் அசாத்திய திறமையும் கொண்ட ராகவா லாரன்ஸ் அவருடன் வேலை பார்ப்பது சிறந்த அனுபவமாக இருந்தது. இது எனக்கு சிறப்பான தருணம். இயக்குனர் பி வாசு அவருக்கு எனது நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. sathya jyothi films shares dhanush captain miller unseen look picture goes viral

What an experience working with this power house of talent and an amazing human being @offl_Lawrence master . This film is very very special 🤩🤩 Can’t wait can’t wait !! 😍😍😍
Thank you #Directorvaasu sir @LycaProductions #chandramukhi2 pic.twitter.com/otLynyeX4H

— Mahima Nambiar (@Mahima_Nambiar) February 23, 2023

மேலும் படப்பிடிப்பில் மேலும் ஒரு ஷெட்டியுலை முடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து  நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் லாரன்ஸ் இருக்கும் புகைப்படமும், வைகை புயல் வடிவேலுவுடன் விளையாடும் புகைப்படம் மற்றும் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ராகவா லாரன்ஸ் வடிவேலுவுடன் இருக்கும் புகைப்படத்துடன் “முழுசா சந்திரமுகியா மாறுன வடிவேலு.. இழுத்து அனைக்கும் ராகவா லாரன்ஸ்” என்று நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

sathya jyothi films shares dhanush captain miller unseen look picture goes viral

Mulusa Chandramukhiya maruna Vadivelu, iluthu aanaikum Ragava Lawrance 😄 @Vadiveluhere

#funduringshoots#chandramuki2 pic.twitter.com/4G8alzzavt

— Raghava Lawrence (@offl_Lawrence) February 23, 2023

கலகலப்பான புகைப்படங்கள் அவ்வப்போது வருவதால் முதல் பாகம் போல் இரண்டாம் பாகமும் கலகலப்புடன் வித்யாசமான உணர்வை தருமா என்பதை படம் வெளியானபோது தான் பார்க்ககூடும். 

துணிவு, வாரிசு 50 வது நாள் கொண்டாட்டம்.. அஜித், விஜய் ரசிகர்களுக்கு Special Treat.. -  உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

துணிவு, வாரிசு 50 வது நாள் கொண்டாட்டம்.. அஜித், விஜய் ரசிகர்களுக்கு Special Treat.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் அறிவிப்பு இதோ..

நூலிழையில் உயிர் தப்பிய விஷால்.. 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ இதோ..
சினிமா

நூலிழையில் உயிர் தப்பிய விஷால்.. 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ இதோ..

அடுத்தடுத்த படங்களுடன் வருகிறார் ஜெயம் ரவி.. 'அகிலன்' வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு - ரசிகர்கள் வைரலாக்கி வரும் அட்டகாசமான போஸ்டர்  இதோ..
சினிமா

அடுத்தடுத்த படங்களுடன் வருகிறார் ஜெயம் ரவி.. 'அகிலன்' வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு - ரசிகர்கள் வைரலாக்கி வரும் அட்டகாசமான போஸ்டர் இதோ..