விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனியில் ஏற்பட்ட விபத்து.. என்ன நடந்தது? - சம்பவம் குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.. வீடியோ இதோ..

படப்பிடிப்பில் திடீர் ஏற்பட்ட விபத்து குறித்து விளக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் - Adhik Ravichandran about mark antony set sudden accident | Galatta

வித்யாசமான கிளாசிக் தோற்றத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’ பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தினை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார், மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத்குமார்  தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜி வி பிரகாஷ் குமார். ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் அட்டகாசமாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் நடித்து வருகின்றனர்.  விஷாலும் எஸ் ஜே சூர்யாவும் அசத்தலான கெட்டப்பில் இது இதுவரை  ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். எந்தவொரு அப்டேட்டுகளும் தராமல் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது இதில் விஷால் நூலிழையில் உயிர் தப்பினார் என்று படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்ட வீடியோவை பகிர்ந்தார். இதனையடுத்து அந்த வீடியோ நேற்று மிகபெரிய அளவு பேசு பொருளாக மாறியது. மேலும் திரைத்துறையில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மார்க் ஆண்டனி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களிடம் நமது கலாட்டா தமிழ் சார்பில் கேட்கப்பட்டது. தொலைபேசி மூலம் சம்பவத்தை விளக்கமளித்த ஆதிக் இவ்வாறு கூறினார்.

ஒரு முக்கியமான காட்சி படமாக்கி கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட 300 பேர் நடுவில் எஸ் ஜே சூர்யா க்கும் விஷாலுக்கு ஒரு விஷயம் நடக்கனும் அப்போது நாங்கள் படத்திற்காக பிரத்யேகமாக வடிவமைத்து வைத்திருந்த லாரி ஒன்று காட்சியில் வந்து ஒரு இடத்தில் நிற்க வேண்டும். ஆனால் பிரேக் சிக்கல் ஏற்பட்டதா என்ன என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் விஷால் படுத்து கிடந்தார்.‌ முன்னாடி இருந்தவர்களுக்காவது லாரி வருவது தெரிந்தது. என்ன நடக்குதுனே தெரில.. Just miss.. பின்னாடி சத்தம் கேட்டு திரும்புனாரா னு தெரில.. அங்கு இருந்த ஜினியர்ஸ் தான் அவர பிடிச்சு இழுத்தார்கள். கண் இமைக்கும் நொடியில் எல்லாம் நடந்தேறி விட்டது. அங்கு இருந்த எஸ்ஜே சூர்யா , விஷால் எல்லோரும் பயந்துட்டாங்க. விஷால் சார் ரியாக்ட் பண்ண கம்மியான நேரம் தான் இருந்தது. கடவுள் அருளால் அவர் பிழைத்தார்.ரொம்ப அதிர்ச்சிக்குள்ளான விஷயம் தான். முன்னெச்செரிக்கையாக இருந்து படப்பிடிப்பு நடத்தினாலும் இது போன்ற விஷயம் நடந்துருக்கு..” என்று தெரிவித்தார்.

மேலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்  மார்க் ஆண்டனி படம் குறித்தும் சம்பத்திற்கு பின் நடந்த நிகழ்வுகள் குறித்தும் விளக்கும் முழு வீடியோ இதோ.

'கேப்டன் மில்லர்' கெட் அப்பில் தனுஷ்.. அட்டகாசமான புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு - வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

'கேப்டன் மில்லர்' கெட் அப்பில் தனுஷ்.. அட்டகாசமான புகைப்படத்தை பகிர்ந்த படக்குழு - வைரலாகும் பதிவு இதோ..

விரைவில் இயக்குனர் விஜயின் ‘அச்சம் என்பது இல்லையே’ .. அருண் விஜய் கொடுத்த அப்டேட் - வைரலாகும் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ..
சினிமா

விரைவில் இயக்குனர் விஜயின் ‘அச்சம் என்பது இல்லையே’ .. அருண் விஜய் கொடுத்த அப்டேட் - வைரலாகும் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ..

துணிவு, வாரிசு 50 வது நாள் கொண்டாட்டம்.. அஜித், விஜய் ரசிகர்களுக்கு Special Treat.. -  உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

துணிவு, வாரிசு 50 வது நாள் கொண்டாட்டம்.. அஜித், விஜய் ரசிகர்களுக்கு Special Treat.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் அறிவிப்பு இதோ..