“அடியாத்தி இது என்ன Feel uh..” தனுஷ் version ல் வெளியானது வா வாத்தி.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் பாடல் இதோ..

வைரலாகி வரும் தனுஷ் பாடிய வா வாத்தி பாடல் - Dhanush Vaathi movie released Trending Vaa vaathi song reprise version | Galatta

கடந்த பிப்ரவரி 17 தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் வெளியானது. வெளியான நாள் முதல் இன்று வரை தமிழ்நாடு , ஆந்திரா மற்றும் தெலுங்கான பகுதிகளில் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு வாரத்தை கடந்த வாத்தி திரைப்படத்தின் கொண்டாட்டம் இன்றும் ஓயாமல் உற்சாகத்துடன் ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷ் முதல் முறையாக இப்படத்தில் ஆசிரியராக நடித்துள்ளார். இவருடன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, பாரதி ராஜா , சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, கென் கருணாஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் ஒருபுறம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாகவும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதத்திலும் படக்குழு சார்பில் இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு வீடியோவை பகிர்ந்தார். அதில் “வாத்தி திரைப்படம் வெற்றி பெற காரணமாக இருந்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி.. உங்கள் அன்பிற்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியவில்லை. ஆனால் உங்கள் எல்லோருக்கும் தனுஷ் சார் சார்பிலும் படக்குழு சார்பிலும் ஒரு பரிசு உள்ளது. அது உங்களுக்கு பிடிக்கும்னு நான் நம்புகிறேன்” என்று இயக்குனர் தமிழிலும் தெலுங்கிலும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

Our Director #VenkyAtluri from the bottom of his heart Thanks all the beautiful audiences who made #Vaathi/#Sir a huge success ❤️

A surprise for all @dhanushkraja fans dropping today, Real soon... Stay tuned! 🤗@iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 pic.twitter.com/AA5dt83m2Q

— Sithara Entertainments (@SitharaEnts) February 23, 2023

இவரை தொடர்ந்து படத்த்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் எழுதி ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட்டிங்கில் உள்ள ‘வா வாத்தி’ பாடல் தனுஷ் குரலில் பிரத்யேகமாக வெளியிடுவதாக அறிவிப்பை வெளியிட்டார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் அந்த பதிவை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் புது வரிகளை தனுஷ் எழுதி பாடியுள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளை இதில் இணைத்து லிரிக்கல் வீடியோவாக வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாடல் தற்போது ரசிகர்களின் மனம் கவர்ந்து அதிகளவு பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

வாத்தி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும் அவர்களின் மனதிற்கு நெருக்கமாக இருப்பது முன்னதாக ஸ்வேதாமோகன் குரலில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் தான். அதன் மற்றொரு வெர்ஷன் தனுஷ் குரலில் வெளியாகியுள்ள பாடலை  ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

விரைவில் இயக்குனர் விஜயின் ‘அச்சம் என்பது இல்லையே’ .. அருண் விஜய் கொடுத்த அப்டேட் - வைரலாகும் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ..
சினிமா

விரைவில் இயக்குனர் விஜயின் ‘அச்சம் என்பது இல்லையே’ .. அருண் விஜய் கொடுத்த அப்டேட் - வைரலாகும் அட்டகாசமான புகைப்படங்கள் இதோ..

துணிவு, வாரிசு 50 வது நாள் கொண்டாட்டம்.. அஜித், விஜய் ரசிகர்களுக்கு Special Treat.. -  உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

துணிவு, வாரிசு 50 வது நாள் கொண்டாட்டம்.. அஜித், விஜய் ரசிகர்களுக்கு Special Treat.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் அறிவிப்பு இதோ..

நூலிழையில் உயிர் தப்பிய விஷால்.. 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ இதோ..
சினிமா

நூலிழையில் உயிர் தப்பிய விஷால்.. 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. - அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ இதோ..