“ஏழை கையில் ரத்தினம் நீ” வெளியானது டாடா படத்தின் ‘தாயாக நான்’ பாடலின் வீடியோ.. – வைரலாகும் கவின் பதிவு இதோ..

உணர்வுபூர்வமான டாடா படத்தின் பாடல் வெளியானது - kavin in dada movie Thayaga nan video song out now | Galatta

சமீபத்தில் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்காத திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று அதற்கான சரியான அங்கீகாரமும் பெற்று வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு ‘லவ் டுடே’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மொழி சினிமா துறைகளில் கவனம் ஈர்த்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு புதுமுக இயக்குனர் பெரிய நட்சத்திர அந்தஸ்து இல்லாமல் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்ற திரைப்படம் ‘டாடா’ பிக் பாஸ் புகழ் கவின் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடித்த டாடா திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ம் தேதி வெளியானது தற்போது மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருகிறது.

படம் நினைத்ததை விட நல்ல விமர்சனத்தை ரசிகர்களிடமும் திரைபிரபலங்களிடமும் பெற்று வருகிறது.    அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கத்தில் உருவான இப்படம் நிகழ் கால காதல் கதையுடன் தனியாக பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் பேசியதால் மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றது. அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையிலான நல்ல ஃபீல் குட் திரைப்படமாக டாடா திரைப்படம் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது இப்படத்தில் கவின் உடன் இணைந்து. கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், ஹரிஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் டாடா திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள டாடா திரைப்படத்திற்கு எழிலரசு ஒளிப்பதிவில், கதிரேஸ் அழகேசன் படத்துக்கு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்..

படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பாக ஜென் மார்டின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிக்க வைத்தது மட்டுமல்லாமல் இணையத்தில் அப்போது டிரெண்ட்டிங்கிலும் இருந்தது. இந்நிலையில் படத்தில் பார்வையாளர்களை உணர்வு பூர்வமாக ஈர்த்து வைக்க உதவிய ‘தாயாக நான் ’ பாடலின் வீடியோ பாடல் தற்போது சர்ப்ரைஸாக வெளியாகியுள்ளது.  விஷ்ணு எட்வன் வரிகளில் பாடல் முன்னதாகவே நல்ல வரவேற்பை பெற்றது இந்நிலையில் உணர்வு பூர்வமான நடிப்புடன் கூடிய வீடியோ தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  வீடியோ பாடலை பகிர்ந்த கவின் அதனுடன் பாடலின் ஒரு வரியான ‘ஏழை கையில் ரத்தினம் நீ ‘ என்று குறிப்பிட்டு அதனுடன் பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இதனையடுத்து தாயாக நான் பாடலுடன் வைரலாகி வருகிறது கவினின் பதிவு . 

Yezhai kaiyil rathinam nee ♥️
Thank you for this @VishnuEdavan1 @JenMartinmusic #Sathya

🤗♥️#Thaayaga video song is here ♥️
▶️ https://t.co/90GIAFpwU8@thinkmusicindia 💥

— Kavin (@Kavin_m_0431) February 23, 2023

 

பிக்பாஸ், குக் வித் கோமாளி தொடர்ந்து பாபா பாஸ்கர் மாஸ்டரின் புது அவதாரம்..  - ரசிகர்களால் வைரலாகி வரும் வீடியோ இதோ..
சினிமா

பிக்பாஸ், குக் வித் கோமாளி தொடர்ந்து பாபா பாஸ்கர் மாஸ்டரின் புது அவதாரம்.. - ரசிகர்களால் வைரலாகி வரும் வீடியோ இதோ..

ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜாக்சன் துரை படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு - வைரலாகி வரும் அட்டகாசமான போஸ்டர் இதோ..
சினிமா

ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜாக்சன் துரை படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த படக்குழு - வைரலாகி வரும் அட்டகாசமான போஸ்டர் இதோ..

நீண்ட காத்திருப்புக்குப் பின் வந்த பிரபுதேவாவின் அதிரடி பட ரிலீஸ் அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்
சினிமா

நீண்ட காத்திருப்புக்குப் பின் வந்த பிரபுதேவாவின் அதிரடி பட ரிலீஸ் அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்