தென்னிந்திய திரை உலகில் பலகோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராகவும் தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும் முன்னணி நட்சத்திர நாயகனாகவும் ஜொலிக்கும் தளபதி விஜய் அவர்கள் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி67 படத்தில் இணையவுள்ளார்.

தளபதி67 திரைப்படத்தின் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இயக்குனர் வம்சி இயக்கத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் பக்கா என்டர்ட்டனிங் - ஃபீல் குட் படமாக உருவாகும் வாரிசு திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் வரும் தீபாவளி தினத்தன்று (அக்டோபர் 24)வெளியாகும் என சமீபத்தில் இசையமைப்பாளர் S.தமன் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய் அவர்களை நேரில் சந்தித்த நடிகர் மனோபாலா இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வாரிசு திரைப்படத்தின் பாடல் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யின் நடனத்தையும் அவரது எனர்ஜியும் பார்த்து வியந்த மனோபாலா அவருடன் 15 நிமிடங்கள் உரையாடியது குறித்தும் பதிவிட்டுள்ளார். நடிகர் மனோபாலாவின் அந்த பதிவு இதோ…

 

Met thalapathi VIJAY n varisu set...it was amazing ...he s still d same...lots of energy while dancing ...15mts talk...gave me freshness and energy for me too...

— Manobala (@manobalam) October 20, 2022