பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் எச் வினோத் கூட்டணியில் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை படம் வெளியானது இதனையடுத்து மூன்றாவது முறையாக இணைந்த கூட்டணி வங்கி கொள்ளையை மையமாக வைத்து துணிவு படத்தை உருவாக்கி உள்ளனர். முன்னதாக இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பாடல்கள் வெளியாகி வரவேற்பு பெற்றுவந்த நிலையில் . படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கூட்டியது.வரும் ஜனவரி 11 பொங்கலையொட்டி வெளிவரவிருக்கும் படத்தையடுத்து படத்தின் நடித்த நாயகி மஞ்சு வாரியார் நமது கலாட்டா மீடியா பிரத்ய பேட்டியில் கலந்து கொண்டார். இதனையடுத்து துணிவு படத்தின் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் கதாபாத்திரம் அவர் ஏற்று நடித்த குறித்தும் படத்தில் துப்பாக்கிகளை கையான்டது குறித்து அவர் பேசுகையில்,

“கன், ரிவால்வர், பிஸ்டல் என்று வேற வேற பிரிவு இருக்கு. எனக்கு தெரிந்ததெல்லாம் பொதுவா துப்பாக்கி மட்டும் தான். ஒவ்வொன்றுக்கும் தனி சிறப்பம்சம் உள்ளது. ஒவ்வொன்றும் வித்யாசமான எடை அளவு கொண்டது. அதையும் எனக்கு அஜித் சார் தான் சொல்லி கொடுத்தார்.” என்றார் மேலும் ஆக்ஷன் படங்களில் நடிப்பது குறித்து அனுபவம்  கேட்கையில் “இந்த படத்தை பொறுத்தவரை எனக்கு எல்லா விஷயமும் புதுசு தான். ஆக்ஷன் படங்களுக்கு பேர் போனவர் அஜித் சார். அவர் படத்துல ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது என்னை சேர்த்ததால் நான் எதுவும்  காமெடியா ஆகிட கூடாது னு நான் பயந்துட்டு இருந்தேன்”  என்றார்

வினோத் சார் படங்களில் கதாநாயகிகளை ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வைப்பது இயக்குனர் வினோத் பாணியாக இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் எப்படி பாதுகாப்பாக கையாண்டீர்கள் என்ற கேள்விக்கு, “நிச்சயமா அதுக்கு அஜித் சாருக்கு தான் நன்றி சொல்லணும், அவர் பாதுகாப்பு மட்டுமல்லாமல், படபிடிப்பில் அவரை சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பையும் கவனமா ரொம்ப கண்டிப்பா பார்ப்பார். அதனால படபிடிப்பில் முன்னேசெரிக்கை நடவடிக்கைக்கு தேவையான எல்லாமே இருந்தது.” என்றார் நடிகை மஞ்சு வாரியார். அதிரடி ஆக்ஷன் கட்சிகளுடன் அதிநவீன  தொழில்நுட்பங்களுடன் உருவாகியுள்ள துணிவு எல்லா தரப்பு மக்களுக்கு பிடிக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது.

படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை படத்தின் நாயகி மஞ்சு வாரியார் பகிர்ந்து கொண்ட முழு காணொளி இதோ..