வந்தியத்தேவனாக பக்கா ஆக்சனில் கார்த்தி... பொன்னியின் செல்வன் 2 பட அதிரடியான புது ப்ரோமோ வீடியோ இதோ!

பொன்னியின் செல்வன் 2 பட வந்தியத்தேவன் ப்ரோமோ வீடியோ,Mani ratnam ponniyin selvan 2 movie vanthiyathevan promo | Galatta

பொன்னியின் செல்வன் என்று இந்த ஒரு வார்த்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் மத்தியில் அதிகம் உலாவும் ஒரு வார்த்தைகளில் ஒன்றாக திகழ்கிறது. அதற்குக் காரணம் தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கிய எழுத்தாளராக திகழும் கல்கி அவர்கள். ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முந்தைய சோழர்களின் சாம்ராஜ்யத்தை மையப்படுத்தி வரலாற்றுப் புனைவு நாவலாக இவர் வடித்த பொன்னியின் செல்வன் நாவல் இன்று வரை அதிக பிரதிகள் விற்கப்பட்ட நாவல்களில் ஒன்றாக உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த அளவுக்கு ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்த இந்த பொன்னியின் செல்வன் நாவலை திரை வடிவமாக்கி பெரும் சாதனை படைத்தவர் இயக்குனர் மணிரத்னம். தொடர்ந்து அற்புதமான படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் மணிரத்தினம் தனது திரைப்பயணத்தில் மணிமகுடமாக உருவாக்கியது தான் இந்த பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் நாவலை மக்கள் விரும்பி படித்ததற்கு காரணமாக அமைந்த சில விஷயங்களில் மிகவும் முக்கியமானது அதன் கதாபாத்திரங்கள். 

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் நாவலின் மிக முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் திரைக்கதையில் இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து பணியாற்ற அதன் பிரம்மிப்பின் உச்சமாக மாற்றும் வகையில் கலை இயக்குனர் தோட்டா தரணி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் மிக சிறப்பாக பணியாற்றி இப்படத்தை மற்றொரு தளத்திற்கு எடுத்துச் சென்றனர். பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது முன்னதாக மார்ச் 29ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது இந்நிலையில் அதற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கின்றன என அறிவிக்கும் வகையில் படத்தின் முக்கிய கதாபாத்திரமான வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகள் அமைந்த ஒரு ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

பில்லியன் டாலர் குடுத்தா GLAMOUR PHOTOSHOOT பண்ணுவீங்களா?- சுவாரஸ்யமாக பதிலளித்த பிரியா பவானி சங்கர்! வைரல் வீடியோ இதோ
சினிமா

பில்லியன் டாலர் குடுத்தா GLAMOUR PHOTOSHOOT பண்ணுவீங்களா?- சுவாரஸ்யமாக பதிலளித்த பிரியா பவானி சங்கர்! வைரல் வீடியோ இதோ

பொன்னியின் செல்வன் 2ல் எத்தனை பாடல்கள்..? இசைப்புயல் ARரஹ்மானின் அட்டகாசமான அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2ல் எத்தனை பாடல்கள்..? இசைப்புயல் ARரஹ்மானின் அட்டகாசமான அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

சினிமா

"அந்த ஊமை அரசி யார்?"- டரெண்டாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் அட்டகாசமான புதிய வீடியோ இதோ!