இருக்கலாம் அல்லது மாற்றப்படலாம்... பொன்னியின் செல்வன் 2 பட பாடல் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த முன்னணி பாடகி! விவரம் உள்ளே

பொன்னியின் செல்வன் 2 பட பாடல் குறித்து சின்மயி பதிவு,singer chinmayi about ponniyin selvan 2 movie song | Galatta

இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு முன்னணி நட்சத்திர பட்டாளமே ஒன்றிணைந்தது பொன்னியின் செல்வன் படத்திற்காக. படத்திற்காக மட்டுமல்ல இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்காகவும் தான். தொடர்ந்து இந்திய சினிமாவிற்கு சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தனது கனவு படைப்பாளர் பொன்னியின் செல்வன் நாவலை ரசிகர்களுக்கு விருந்தாக்கினார். புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவல் ஒரு வரலாற்று புனைவு நாவலாகும். இதன் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் இதயங்களை கொள்ளையடித்தவை. இந்த கதாபாத்திரங்களை திரையுடைவில் நிஜத்தில் கொண்டு வர இயக்குனர் மணிரத்னத்தோடு கைகோர்த்தனர் முன்னணி நட்சத்திரங்கள். 

அந்த வகையில் ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து பணியாற்றிய திரைக்கதை வசனத்தில் பிரம்மாண்டமாக தயாரான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் பாகம் 2 ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

முன்னதாக வருகிற மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஒரு பாடலை பாடியுள்ள பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், "பொன்னியின் செல்வன் 2 தெலுங்கு வெர்ஷனில் ஒரு பாடல் பாடி இருக்கிறேன்… இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ரெக்கார்ட் செய்யப்பட்டது. இந்தப் பாடல் படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கவில்லை அல்லது எப்போதும் போல இருக்கலாம்... மேலும் மாற்றப்படலாம் நன்றியுடன்" என குறிப்பிட்டிருக்கிறார். எனவே பாடகி சின்மயி பாடியுள்ள இந்த பாடல் இடம் பெறுமா என்பதை அடுத்த சில தினங்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
 

I have sung in Ponniyin Selvan 2
*TELUGU*
(Not in Tamil)
Also I recorded only 2 days ago and wasn’t expecting it to be retained or anything as usual and thought I’d be replaced. Soooo :)

Grateful :) https://t.co/lCD7ZvanGK

— Chinmayi Sripaada (@Chinmayi) March 26, 2023

சினிமா

"அந்த ஊமை அரசி யார்?"- டரெண்டாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் அட்டகாசமான புதிய வீடியோ இதோ!

சிலம்பரசன்TRன் பத்து தல பட புதிய ஸ்பெஷல் ட்ரீட் ரெடி… அட்டகாசமான அடுத்த சர்ப்ரைஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் பத்து தல பட புதிய ஸ்பெஷல் ட்ரீட் ரெடி… அட்டகாசமான அடுத்த சர்ப்ரைஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

விஷாலின் அதிரடி ஆக்சன் பட பாடல் படைத்த அட்டகாசமான சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சினிமா

விஷாலின் அதிரடி ஆக்சன் பட பாடல் படைத்த அட்டகாசமான சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!