பொன்னியின் செல்வன் 2ல் எத்தனை பாடல்கள்..? இசைப்புயல் ARரஹ்மானின் அட்டகாசமான அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

பொன்னியின் செல்வன் 2ன் பாடல்கள் குறித்த ARரஹ்மானின் அறிவிப்பு,A r rahman composed 7 songs for ponniyin selvan 2 movie | Galatta

உலக அளவில் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றாக புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வன் நாவல் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் நாவலாக திகழ்கிறது. ஐந்து பாகங்களைக் கொண்ட நாவலாக வெளிவந்த இந்த பொன்னியின் செல்வன் நாவலை திரை வடிவமாக கொண்டு வர மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் , உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல ஜாம்பவான்கள் முயற்சி செய்தனர். நீண்ட காலமாக முயற்சி செய்த இயக்குனர் மணிரத்னம் சில ஆண்டுகளுக்கு முன்பு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்த நிலையில் பின்னர் சில காரணங்களால் அப்போது தடைபட்டது. இருப்பினும் விடாமுயற்சியோடு தொடர்ந்து போராடி தனது கடின உழைப்பால் பொன்னியின் செல்வனை திரை வடிவமாக இரண்டு பாகங்களாக இயக்கி ரசிகர்களை மகிழ்வித்தார் இயக்குனர் மணிரத்னம்.வருகிற மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு  திரைக்கதை வசனத்தில் பணியாற்றியுள்ளனர். முன்னணி கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரம்மிப்பின் உச்சமாக தயாராகி வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிலேயே ஆல் டைம் ரெகார்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. முதல் பாகத்தை திரையரங்குகளில் கொண்டாடிய ரசிகர்கள் இரண்டாவது பாகத்திற்காக மிகுந்த ஆவலோடு காத்திருக்க, வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2வில் மொத்தம் ஏழு பாடல்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் அசத்தலான புதிய வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…
 

#PonniyinSelvan2 Music and Trailer Launch on 29th March at Jawaharlal Nehru Indoor Stadium, Chennai!

#CholasAreBack

#PS2 #ManiRatnam @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN @ShakthisreeG @ShwetaMohan @Chinmayi pic.twitter.com/Xz18idjPHd

— A.R.Rahman (@arrahman) March 26, 2023

விஷாலின் அதிரடி ஆக்சன் பட பாடல் படைத்த அட்டகாசமான சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சினிமா

விஷாலின் அதிரடி ஆக்சன் பட பாடல் படைத்த அட்டகாசமான சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ரவிக்கு அப்போ ஒண்ணுமே தெரியாது... ஜெயம் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஷகீலா! வீடியோ உள்ளே
சினிமா

ரவிக்கு அப்போ ஒண்ணுமே தெரியாது... ஜெயம் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஷகீலா! வீடியோ உள்ளே

அந்த மாதிரி ஒரு நாள் இருந்திருந்தா நான் வேற லெவல்... நயன்தாரா குறித்து மனம் திறந்து பேசிய ஷகீலா! வைரல் வீடியோ இதோ
சினிமா

அந்த மாதிரி ஒரு நாள் இருந்திருந்தா நான் வேற லெவல்... நயன்தாரா குறித்து மனம் திறந்து பேசிய ஷகீலா! வைரல் வீடியோ இதோ