‘நீங்கள் சேர நான் தான் காரணம்!’- கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் திருமண ரகசியத்தை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்! ட்ரெண்டிங் வீடியோ

கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமண ரகசியத்தை பகிர்ந்த பிரியா பவானி சங்கர்,manjima mohan replaced priya bhavani shankar in devarattam | Galatta

எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சிலம்பரசன்.TR & கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த பத்து தல திரைப்படம் இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகிறது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடும் பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனுடைய நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் பேசியபோது, நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் இணைவதற்கு தான் ஒரு முக்கிய காரணம் என நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக நடிகர் கௌதம் கார்த்திக்கிடம், “இறுதியாக உங்களிடம் ஒரு கேள்வி, வாழ்க்கையில் நான் இந்த தப்பை செய்து விட்டேன் இனிமேல் நான் இதை செய்யக்கூடாது என நீங்கள் நினைக்கக்கூடிய படங்கள் எவை, நாங்கள் ஒரு பட்டியல் கொடுக்கிறோம்…” என பேசியபோது, குறுக்கிட்ட நடிகை பிரியா பவானி சங்கர், “என்னிடம் கேட்டால் நானும் ஒரு பட்டியல் கொடுப்பேன்” என சிரித்தபடி தெரிவித்தார்.  தொடர்ந்து கௌதம் கார்த்திக்கிடம், “ஒருபுறம் சாதி சார்ந்த படங்களாக தேவராட்டம் இருக்கட்டும் அல்லது 18+ படங்களாக இருக்கட்டும்” என நாம் கேட்டுக் கொண்டிருந்தபோது, மீண்டும் குறுக்கிட்ட நடிகை பிரியா பவானி சங்கர், “இவரால் தேவராட்டம் படத்தை தவிர்க்க முடியாது. அதனால்தான் அவருடைய காதலியை கரம் பிடித்தார்.” என நம்மிடம் சொல்லிவிட்டு, தொடர்ந்து கௌதம் கார்த்திக்கிடம், “உன்னிடம் சொல்லி இருக்கிறேனா? தேவராட்டம் திரைப்படம் என்னிடம் வந்தது… ஆமாம் ஞானவேல் ராஜா சார் படத்தில் நான் நடிக்க வேண்டியது. ஆனால் அதன் பிறகு தேதிகள் சரி வர அமையாதது மற்றும் சில காரணங்களுக்காக அது கைவிடப்பட்டது. அதனால் தான் மஞ்சிமா மோகன் தேவராட்டம் படத்தில் நடிக்க வேண்டியதாயிற்று. அதனால் தான் நீங்கள் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு சேர்ந்தவர்கள். எனவே நீங்கள் இருவரும் எனக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.” என பிரியா பவானி சங்கர் சொல்ல, பதிலுக்கு நடிகர் கௌதம் கார்த்திக், “உங்கள் வீட்டுக்கு பிரியாணி போடுகிறேன்” என பதிலளித்தார். கலகலப்பான அந்த முழு பேட்டி இதோ…
 

பொன்னியின் செல்வன் 2ல் எத்தனை பாடல்கள்..? இசைப்புயல் ARரஹ்மானின் அட்டகாசமான அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2ல் எத்தனை பாடல்கள்..? இசைப்புயல் ARரஹ்மானின் அட்டகாசமான அறிவிப்போடு வந்த புது GLIMPSE இதோ!

சினிமா

"அந்த ஊமை அரசி யார்?"- டரெண்டாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் அட்டகாசமான புதிய வீடியோ இதோ!

சிலம்பரசன்TRன் பத்து தல பட புதிய ஸ்பெஷல் ட்ரீட் ரெடி… அட்டகாசமான அடுத்த சர்ப்ரைஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் பத்து தல பட புதிய ஸ்பெஷல் ட்ரீட் ரெடி… அட்டகாசமான அடுத்த சர்ப்ரைஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!