பொன்னியின் செல்வன் 2 படத்துடன் கைகோர்த்த வாரிசு தயாரிப்பாளர்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான புது அறிவிப்பு இதோ!

பொன்னியின் செல்வன் 2 படத்துடன் கைகோர்த்த தயாரிப்பாளர் தில் ராஜு,ponniyin selvan 2 movie telugu rights bagged by sri venkateshwara creations | Galatta

இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கினார். புகழ்மிக்க எழுத்தாளர் கல்கியவர்களின் காலத்தால் அழியாத படைப்பான வரலாற்று புனைவு பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் எத்தனையோ ஜாம்பவான்கள் கைவிட்ட போதிலும், மணிரத்னம் மட்டும் இருக பிடித்து ரசிகர்களுக்கு இனிய விருந்து கொடுத்தார். இதற்கு பக்கபலமாக கலை இயக்குனர் தோட்டா தரணி ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் தங்களது உச்சகட்ட உழைப்பை இப்படத்திற்காக கொடுத்தனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனத்தில் பணியாற்றினர். ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. முன்னதாக பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகிற மார்ச் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது. முதல் பாகத்திற்கான பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் இணைந்து கலந்து கொண்ட நிலையில், இரண்டாவது பாகத்திற்கான இசை வெளியீட்டு விழாவிலும் உச்ச நட்சத்திரங்கள் பங்கு பெற வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் அகநக பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Queen of the Ocean, Queen of the Hearts and the King of the Masses!#PS2TrailerFromMarch29#CholasAreBack#PS2 #PonniyinSelvan2 #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @PrimeVideoIN pic.twitter.com/Q0ikzAKp9X

— Sri Venkateswara Creations (@SVC_official) March 26, 2023

கரிகாலனும் நந்தினியும்.. 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் தேதியை வெளியிட்ட படக்குழு .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

கரிகாலனும் நந்தினியும்.. 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் தேதியை வெளியிட்ட படக்குழு .. உற்சாகத்தில் ரசிகர்கள் - அட்டகாசமான Glimpse இதோ..

வெற்றிமாறன் படத்தின் டைட்டிலுக்கு எழுந்த கேள்வி.. கடுமையாக விமர்சித்த எழுத்தாளர்.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

வெற்றிமாறன் படத்தின் டைட்டிலுக்கு எழுந்த கேள்வி.. கடுமையாக விமர்சித்த எழுத்தாளர்.. – வைரலாகும் பதிவு இதோ..

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்.. – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விவரம் இதோ..
சினிமா

நடிகை யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட்.. – நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விவரம் இதோ..