பில்லியன் டாலர் குடுத்தா GLAMOUR PHOTOSHOOT பண்ணுவீங்களா?- சுவாரஸ்யமாக பதிலளித்த பிரியா பவானி சங்கர்! வைரல் வீடியோ இதோ

கிளாமர் போட்டோ ஷூட் குறித்து பேசிய பிரியா பவானி சங்கர்,priya bhavani shankar about glamour photoshoot | Galatta

தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக மீடியாவில் தனது பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர் தொடர்ந்து விஜய் டிவியின் கல்யாண முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்து மிக பிரபலம் அடைந்தார். தொடர்ந்து தமிழில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் மதுமிதா எனும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி வெள்ளித் திரையிலும் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் பிரியா பவானி சங்கர். தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம் இயக்குனர் SJ.சூர்யா கதாநாயகனாக நடித்த மான்ஸ்டர், ஹரிஷ் கல்யாணின் ஓ மண பெண்ணே உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். 

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரியா பவானி சங்கர் தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அகிலன் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், அருள்நிதியுடன் டிமான்டி காலனி 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் சிலம்பரசன்.TR & கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள பத்து தல படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதனிடையே கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கயுள்ள பத்து தல திரைப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்க, பென் ஸ்டூடியோஸ் வெளியிடும் பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கரிடம், "பில்லியன் டாலர் ரூபாய் கொடுத்து ஒரு கிளாமர் போட்டோ ஷூட் செய்யச் சொன்னால் செய்வீர்களா?" எனக் கேட்டபோது, "எனக்கு அந்த மாதிரி ஒரு உடல்வாகு இருந்தால் நான் செய்வேன். எனக்கு இந்த ஹாட் மற்றும் கிளாமர் வார்த்தைகளுக்கான அர்த்தம் தெரியவில்லை. என்னுடைய உடலுக்கு எது பொருந்துகிறதோ அதை நான் செய்கிறேன். எது மோசமாக இருக்கிறதோ அதை நான் செய்வதில்லை. நீங்கள் பில்லியன் டாலர் ரூபாய் கொடுக்கும்போது எனக்கு அந்த நம்பிக்கை இருந்தால் நான் அதை செய்வேன் ஆனால் அதற்கு நான் தயாராக வேண்டும். நான் நன்றாக பிரியாணி எல்லாம் சாப்பிட்டுக்கொண்டு கிளாமர் போட்டோ ஷூட் எல்லாம் பண்ண முடியாது" என பதிலளித்துள்ளார். கலகலப்பான அந்த முழு பேட்டி இதோ…
 

சிலம்பரசன்TRன் பத்து தல பட புதிய ஸ்பெஷல் ட்ரீட் ரெடி… அட்டகாசமான அடுத்த சர்ப்ரைஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் பத்து தல பட புதிய ஸ்பெஷல் ட்ரீட் ரெடி… அட்டகாசமான அடுத்த சர்ப்ரைஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

விஷாலின் அதிரடி ஆக்சன் பட பாடல் படைத்த அட்டகாசமான சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சினிமா

விஷாலின் அதிரடி ஆக்சன் பட பாடல் படைத்த அட்டகாசமான சாதனை... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

ரவிக்கு அப்போ ஒண்ணுமே தெரியாது... ஜெயம் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஷகீலா! வீடியோ உள்ளே
சினிமா

ரவிக்கு அப்போ ஒண்ணுமே தெரியாது... ஜெயம் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஷகீலா! வீடியோ உள்ளே