"அந்த ஊமை அரசி யார்?"- டரெண்டாகும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் அட்டகாசமான புதிய வீடியோ இதோ!

பொன்னியின் செல்வன் 2 படத்தின் அட்டகாசமான புதிய வீடியோ,mani ratnam in ponniyin selvan 2 movie new promo video | Galatta

இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மணிரத்னம் அவர்களின் திரை பயணத்தில் மணிமகுடுமாக அமைந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். பிரம்மிப்பின் உச்சமாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படமாக பிளாக் பஸ்டர் ஹிட்டானது. புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. வரலாற்றுப் புனைவு நாவலை தழுவி தயாராகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனத்தில் பணியாற்றியுள்ளனர்.

ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் அற்புதமான ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கினறனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் அகநக பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் மற்ற பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வருகிற மார்ச் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் இறுதியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அறிவிக்கப்பட்ட ஊமை அரசி கதாபாத்திரத்தை குறிப்பிட்டு குந்தவை கதாப்பாத்திரம் "யார் அந்த ஊமை அரசி?" எனக் கேட்கும் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அட்டகாசமான அந்த புரோமோ வீடியோ இதோ…
 

ரவிக்கு அப்போ ஒண்ணுமே தெரியாது... ஜெயம் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஷகீலா! வீடியோ உள்ளே
சினிமா

ரவிக்கு அப்போ ஒண்ணுமே தெரியாது... ஜெயம் பட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஷகீலா! வீடியோ உள்ளே

அந்த மாதிரி ஒரு நாள் இருந்திருந்தா நான் வேற லெவல்... நயன்தாரா குறித்து மனம் திறந்து பேசிய ஷகீலா! வைரல் வீடியோ இதோ
சினிமா

அந்த மாதிரி ஒரு நாள் இருந்திருந்தா நான் வேற லெவல்... நயன்தாரா குறித்து மனம் திறந்து பேசிய ஷகீலா! வைரல் வீடியோ இதோ

உலகநாயகன் கமல்ஹாசன் - சீயான் விக்ரம் - சிலம்பரசன்TR ஆகியோர் அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல்! விவரம் உள்ளே
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசன் - சீயான் விக்ரம் - சிலம்பரசன்TR ஆகியோர் அஜித் குமாரின் தந்தை மறைவுக்கு இரங்கல்! விவரம் உள்ளே