இந்திய திரையுலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் கே.யு மோகனனின் மகள் ஆவார் மாளவிகா மோகனன். மலையாளத்தில் வெளியான பட்டம் போலே என்ற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர், அதனைத்தொடர்ந்து கன்னடத்தில் ஒரு படம், பின்னர் ஹிந்தியில் பியாண்ட் தி க்ளவுட்ஸ் படத்தின் மூலமாக பாலிவுட்டிலும் கால் பதித்தார். 

அதன்பின் பேட்ட படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் மாளவிகா. தமிழில் ஓரிரு திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் புகழின் உச்சியில் இருக்கும் மாளவிகா மோகனன் ஆகஸ்ட் 4ஆம் தேதியான இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி இணையத்தை அதிர வைக்கின்றனர். 

இந்நிலையில் மாளவிகாவின் பிறந்தநாளையொட்டி, அவரது காமன் DPயை வெளியிட்டார் மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதற்கு பதிலளித்த மாளவிகா, நன்றி லோகேஷ்.. மாஸ்டர் படக்குழுவுடன் சென்னையில் பிறந்தநாளை கொண்டாட இருந்தேன். அதற்குள் இந்த ஸ்டுபிட் கோவிட் வந்துவிட்டது என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

மாஸ்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளார். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் இந்த படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. 

இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை லாக்டவுனில் துவங்கினர் படக்குழுவினர். ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது. ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, என்ன நடந்தாலும் மாஸ்டர் படம் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என்பதை உறுதி செய்தார். 

கொரோனா காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் மாளவிகா, சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சமீபத்தில் மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். பாரம்பரிய உடையான பட்டு புடவையில் அழகாக போஸ் தரும் மாளவிகா மோஹனனை ரசிகர்கள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இனி வரும் தமிழ் படங்களில் மாளவிகா அதிகம் காணப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.