உலகம் முழுவதும் ஏழைப் பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்கி வரும் கொரோனா வைரஸினால்  நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

அதுமட்டுமின்றி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் பாஜக-வை சேர்ந்த 5 முக்கியத் தலைவர்களான, இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோர் கொரோனாவினால் பாதிக்கபட்டு தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, அன்பழகன், தங்கமணி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
 
மக்கள் நல பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள், அமைச்சர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதும் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லை என்றும், வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிவகங்கை தொகுதியில் உள்ள மானகிரி இல்லத்தில் நான் நலமாக இருக்கிறேன் என்று ப.சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

ப சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து அறிவதற்காக பலரும், அவரை தொலைபேசி, மெயில், ட்விட்டர் மூலம் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இது குறித்து கார்த்தியின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக, ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள தகவலில்,  கார்த்தி சிதம்பரம் MP கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னையில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நலமாக இருக்கிறார்.  நான் சிவகங்கைத் தொகுதியில் மானகிரி இல்லத்தில் நலமாக இருக்கிறேன். எல்லோருடைய கனிவான கேள்விகளுக்கு நன்றி என்று அவர் பதிவிட்டுள்ளார்.