“ஒரு பக்கம் வரதட்சணை கொடுமை, இனொரு பக்கம் தன் நண்பர்களுடன் நெருக்கமாகப் பழகும்படி கணவர் என்னை டார்ச்சர் செய்கிறார்” என்று பாதிக்கப்பட்ட மனைவி புகார் அளித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியைச் சேர்ந்த 42 வயதான அனுப்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் தான், தன் கணவர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி, அதிர வைத்துள்ளார்.

அனுப்மாவிற்கு கடந்த 2002 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முன்னதாக, மணமகன் எம்.பி.ஏ படித்திருப்பதாகவும், அவருக்கு சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் உள்ளதாகவும் மணமகனின் வீட்டார், பெண் வீட்டாரிடம் கூறிய நிலையில், திருமணத்திற்கு 6 மாதங்களுக்கு 

முன்னதாகவே பெண் வீட்டாரிடம் 52 சவரன் வரதட்சணையாகக் கேட்டுள்ளனர். அதன் படி, பெண் வீட்டார் சார்பில் 52 சவரன் நகைகள் கொடுக்கப்பட்டன.

அதன் பிறகு, மணமகளை எம்.பி.ஏ. டிகிரி படிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதுடன், அவர்களுக்குச் சொந்தமான டெக்ஸ்டைல் மில்லையும் வரதட்சணையாகத் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு, அந்த பெண்ணும், பெண் வீட்டாரும் ஒற்றுக்கொள்ளவில்லை.

இப்படியாக, பல்வேறு நிர்பந்தகளுக்கு மத்தியில் இந்த தம்பதிக்குக் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, இந்த தம்பதிக்குக் கடந்த 2005 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

அதன்பிறகு, பெண் எம்.பி.ஏ. டிகிரி படிக்காததால், கணவர் புதிதாகத் தொழில் தொடங்கி லோன் வாங்கித் தருமாறு கணவர் வீட்டார் வற்புறுத்தி உள்ளனர். அந்த பெண்ணும், வேறு வழியின்றி லோன் வாங்கி உள்ளார். அந்த பணத்தை வைத்து, டிராவல் ஏஜென்ஸி ஒன்றையும் தொடங்கி உள்ளார். 
    
டிராவல் ஏஜென்ஸியை அவரது கணவர் சரிவரக் கவனிக்காத நிலையில், அந்த தொழில் பெரிதாகச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன், அந்த பெண்ணின் கணவர் சூதாட்டம் மற்றும் போதைக்கு அடிமையாகி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மனைவியிடம் இன்னும் வரதட்சணை தர வேண்டும் என்று கூறி, கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி கொடுமை படுத்த தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக, “என்னுடைய சக ஆண் நண்பர்களுடன் நீ நெருக்கமாகப் பழக வேண்டும்” என்றும், மனைவியைத் தொடர்ந்து வற்புறுத்தி
வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி, கணவரின் நண்பர்களுடன் பழகினால், தனது நண்பர்களின் மனைவியுடன் தன்னால் நெருங்கிப் பழக முடியும் கணவர்
நினைத்துள்ளதாக” பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு கணவர் வெளிநாட்டுக்குச் சென்ற நிலையில், அதன் பிறகு அவர் ஊர் திரும்ப வில்லை. அதன் தொடர்ச்சியாக, தற்போது கொரோனா நோய் தொற்றின் காரணமாக, பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கால் டிராவல் ஏஜென்சி நிறுவனம் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், கணவர் வீட்டில் “எனது நகையைத் திருப்பி தருமாறு” அந்த பெண் கேட்டுள்ளார். ஆனால், நகையைக் கொடுக்க மறுத்த கணவரின் குடும்பத்தினர், அந்த பெண்ணை அடித்து உதைத்து வீட்டை விட்டு விரட்டி அடித்தாகவும் கூறி” பாதிக்கப்பட்ட பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார்
அளித்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கணவர் மீதும், கணவரின் குடும்பத்தார் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.